துருவ் விக்ரமின் முதல் படம் ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,November 27 2019]

துருவ் விக்ரம் நடித்த முதல் படமான ’ஆதித்ய வர்மா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் அர்ஜுன்ரெட்டி படத்தை முதலில் ரீமேக் செய்த இயக்குனர் பாலாவின் ’வர்மா’ படத்தை ரிலீஸ் செய்ய விக்ரம் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாலா இயக்கிய ’வர்மா’ படம் விக்ரமுக்கு மிகவும் பிடித்திருந்தாலும் அந்த படம் அர்ஜூன்ரெட்டியின் உண்மையான ரீமேக் போல் இல்லை என்றும் அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றும் படக்குழுவினர் கூறியதால் ’வர்மா’ படம் முடக்கப்பட்டது. இதனால் விக்ரமுக்கு வருத்தம் தான் என்றாலும் ’வர்மா’ படத்தை எப்படியாவது பின்னாளில் ரிலீஸ் செய்யலாம் என்று அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ‘ஆதித்ய வர்மா’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ’வர்மா’ படத்தையும் வெளியிடலாம் என்று விக்ரம் திட்டமிட்டுள்ளதாகவும் இரண்டு படங்களையும் ரசிகர்கள் பார்த்து எந்த படம் நல்ல படம் என ஒப்பீடு செய்ய அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க விக்ரம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே பாலாவின் ’வர்மா’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. துருவ் விக்ரமின்து உண்மையான முதல்படமான ’வர்மா’ படம் எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'தளபதி 64' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? புதிய தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக டெல்லியில் நடைபெற்று வருவது தெரிந்ததே.

பிரியங்கா சோப்ராவின் வீட்டிற்கு வந்த புதுவரவு

விஜய் நடித்த 'தமிழன்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என உலக புகழ் பெற்றவர் நடிகை பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் இவருக்கும் நிக்ஜோன்ஸ்

தர்ஷனின் கனவை நிறைவேற்றிய பிரபல நடிகர்!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியின் வின்னர் ஆகவில்லை என்றாலும் பல கோடி மக்களின் இதயங்களில் இடம் பெற்றவர் தர்ஷன்.

`புதுப்பேட்டை', `விருமாண்டி' படப் புகழ் நடிகர் பாலா சிங் காலமானார்!

கோலிவுட் திரையுலகில் பல திரைப்படங்களில் வில்லன், குணசித்திர கேரக்டர்களில் நடித்த பிரபல நடிகர் பாலாசிங் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 67

காதல் திருமணம் செய்த இளைஞரை தண்டவாளத்தில் தூக்கி போட்ட பெண்ணின் உறவினர்கள்

நெல்லை மாவட்டத்தில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞர் ஒருவரை பெண்ணின் உறவினர்கள் தூக்கி தண்டவாளத்தில் வீசி கொலை செய்ததாக பெண்ணின் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்