ரஜினியை சந்திக்க தனுஷ் மறுத்தாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னர் ரஜினி அவரை தொடர்புகொண்டு சந்திக்க முயற்சி செய்ததாகவும் ஆனால் ரஜினியை சந்திக்க தனுஷ் மறுத்து விட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
நடிகர் தனுஷ் தனது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாகவும் தானும் ஐஸ்வர்யாவும் பிரிய போவதாகவும் நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை பேசி தீர்க்க தனுஷை சந்திக்க ரஜினி முயற்சித்ததாகவும் ஆனால் ரஜினிகாந்த் மீது வைத்திருந்த மரியாதை காரணமாக அவரது சந்திப்பை தனுஷ் தவிர்த்ததாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் இன்னும் சட்டரீதியாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரியாத நிலையில் இரு தரப்பு பெரியவர்கள் இரண்டு குழந்தைகளுக்காக மீண்டும் சேர்த்து வைக்க முயற்சி செய்வார்கள் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments