'தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7' படத்தை  மிஸ் செய்தாரா தீபிகா படுகோன்: அவரே கூறிய காரணம்..!

  • IndiaGlitz, [Sunday,September 22 2024]

உலகம் முழுவதும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த ஹாலிவுட் திரைப்பட தொடர் தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ். 2001-ஆம் ஆண்டு முதல் பாகம் வெளியான நிலையில் இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7 திரைப்படத்தில் நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனுக்கு அழைப்பு வந்தது. ஆனால், அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7 திரைப்படத்தில் பால் வாக்கர், கோடி வாக்கர், நதாலி இம்மானுவேல், ஜேசன் ஸ்டாதம், வின் டீசல் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்த நிலையில் இதில் நதாலி இம்மானுவேல் நடித்த ராம்சே என்ற கேரக்டரில் முதலில் தீபிகா படுகோனுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், அப்போது தீபிகா, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா படத்தில் பிஸியாக இருந்ததால், அந்த வாய்ப்பை ஏற்க முடியாமல் போனதாக தெரிகிறது.

சமீபத்தில், தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ் தொடரில் நடிக்காததற்கான காரணம் குறித்து கேட்டபோது, தீபிகா பதிலளித்தார்: அதற்கு நான் வருந்தவில்லை. ஏற்கனவே ஒப்பந்தமான படத்தை முதலில் முடிக்க வேண்டியது அவசியமாக இருந்தது. அந்த படத்தில் சில முக்கிய காட்சிகளில் நான் பணியாற்ற வேண்டியிருந்தது. அதை பாதியில் விட்டுவிட்டு செல்ல முடியாது, என்றார்.

 

More News

ஈ.வெ.ரா, அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த வாரிசு விஜய்.. ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு..!

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோரின் அரசியல் வாரிசு விஜய் தான் என அவரது ரசிகர்கள் திருச்சியில் போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயம் ரவி விவகாரம்: முதல் முறையாக மனம் திறந்த பாடகி கெனிஷா..!

நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் பிரிவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷாவுக்கு தொடர்பு இருப்பதாக ஊடகங்கள்

மனைவி குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருந்த இன்ஸ்டாகிராம்.. ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு..!

நடிகர் ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் கணக்கை, அவருடைய மனைவியின் குடும்பத்தினரே இதுவரை கையாண்டு வந்த நிலையில், தற்போது அந்த கணக்கை அவர் மீட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிக்பாஸ்ன்னா இப்படி இருக்கனும்.. ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய நாகார்ஜூனா..!

கடந்த சில நாட்களாக பிக் பாஸ் தெலுங்கு சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

வில்லனாக நடிக்கும் மம்முட்டி.. ஹீரோவாக நடிக்கும் 'ஜெயிலர்' வில்லன்.. ஆச்சரிய தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர், ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கும் நிலையில், அந்த படத்தில் வில்லனாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி