சுந்தர் சி - ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் படத்தின் நாயகி இவரா?

  • IndiaGlitz, [Friday,June 24 2016]

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 படம் மிகப்பிரமாண்டமாகவும், எந்திரன், '2.0' மற்றும் பாகுபலி'யை விட அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளதாகவும், இந்த படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும் வந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகனாக இளையதளபதி விஜய் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டைட்டில் 'சங்கமித்ரா' என்றும் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் ஏற்கனவே பலநாடுகளில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாபு சிரில் கலை இயக்குனராகவும், கமலக்கண்ணன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளையும் செய்யவுள்ளதாக கூறப்படும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் திட்டமிட்டுள்ளது. இயக்குனர் சுந்தர் சி உடன் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் பத்ரி நாராயணன் ஆகியோர் திரைக்கதை அமைக்கும் பணியில் உள்ளனர்.

More News

மலேசிய அரசின் சிறப்பு அனுமதியை பெற்றது விக்ரமின் 'இருமுகன்'

சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் ஒருசில வாரங்களில்...

சிரஞ்சீவி மகள் படத்தில் தனுஷ்?

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக் படம் நேற்று முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது...

'பொல்லாதவன்' விளையாட்டை 'வடசென்னைக்கு' கொண்டு வந்த தனுஷ்-வெற்றிமாறன்

உலகநாயகன் கமல்ஹாசன் 'சத்யா' படத்திலும், இளளயதளபதி விஜய் 'திருமலை' படத்திலும் கேரம் விளையாட்டு விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன...

சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் 'இறுதிச்சுற்று' நாயகி

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், வேதிகா நடித்த சூப்பர் ஹிட் படமான 'ஷிவலிங்கா'

த்ரிஷாவின் 'நாயகி' ரிலீஸ் தேதி

கடந்த பத்து வருடங்களாக கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் த்ரிஷா நடித்து முடித்துள்ள 'நாயகி'...