சுந்தர் சி - ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் படத்தின் நாயகி இவரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 படம் மிகப்பிரமாண்டமாகவும், எந்திரன், '2.0' மற்றும் பாகுபலி'யை விட அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளதாகவும், இந்த படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும் வந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் நாயகனாக இளையதளபதி விஜய் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டைட்டில் 'சங்கமித்ரா' என்றும் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் ஏற்கனவே பலநாடுகளில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சாபு சிரில் கலை இயக்குனராகவும், கமலக்கண்ணன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளையும் செய்யவுள்ளதாக கூறப்படும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் திட்டமிட்டுள்ளது. இயக்குனர் சுந்தர் சி உடன் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் பத்ரி நாராயணன் ஆகியோர் திரைக்கதை அமைக்கும் பணியில் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com