காபூல் விமான நிலையத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு… உயரும் பலி எண்ணிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்துதான் அமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டன் போன்ற நாடுகள் தங்களுடைய சொந்த நாட்டு மக்களையும் நட்பு நாட்டைச் சேர்ந்தவர்களையும் அங்கிருந்து மீட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று காபூல் விமான நிலையம் அருகே ஒரு குண்டும், ஒரு ஹோட்டலில் இருந்து ஒரு குண்டும் வெடித்துள்ளன.
இந்த குண்டு வெடிப்பினால் இதுவரை 73 அப்பாவி மக்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும் அமெரிக்காவை சேர்ந்த மாலுமிகள் 12 பேரும் 1 கடற்படை மருத்துவரும் உயிரிழந்துள்ளார். இதைத்தவிர 140 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தக் கோரச் சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் முழுக்க தாலிபான்கள் பிடிக்குள் சிக்கியுள்ளது. இந்நிலையில் பயங்கரவாத அமைப்புகளுடன் கைக்கோர்க்க மாட்டோம் என்று முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாலிபான்கள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். ஆனால் தாலிபான்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இந்தத் தாக்குதலை யார் முன்னின்று நடத்தினார்களோ, யார் அமெரிக்கா பாதிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்களோ அவர்கள் இதனை தெரிந்துகொள்ள வேண்டும். காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம். அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும். தேடிவந்து வேட்டையாடுவோம். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்கள் மற்றும் நட்பு நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணி தொடரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைத்தவிர இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. அதேபோல் இந்தச் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஐ.நா.பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உடனடியாக உதவ உலக நாடுகள் முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout