'பிகில்' டீசர் இணையத்தில் லீக் ஆகிவிட்டதா? பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Monday,September 30 2019]

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த டீசரை வரவேற்க விஜய் ரசிகர்கள் உட்பட சினிமா ரசிகர்கள் அனைவரும் தயாராக உள்ளனர்

இந்த நிலையில் 'பிகில்' படத்தின் டீஸர் இணையத்தில் கசிந்து விட்டதாக நெட்டிசன்கள் டுவீட்டுக்களை பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு டுவிட்டர் பயனாளி 'பிகில்' படத்தின் டீசரை இணையத்தில் பார்த்து விட்டதாகவும் டீசர் வெறித்தனமாக இருப்பதாகவும் அதிகாரபூர்வ டீசருக்காக வெயிட்டிங் என்றும் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்

இந்த டுவீட்டால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 'பிகில்' டீசர் உண்மையிலேயே கசிந்துவிட்டதா? அல்லது இது ஒரு வதந்தியா? என்பது தெரியவில்லை. இருப்பினும் இது குறித்து படக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அக்டோபர் 1 அல்லது 2 ஆம் தேதி 'பிகில்' படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று கூறப்படுகிறது

More News

தர்ஷனை நெகிழ வைத்த ஆடியன்ஸ்: பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தர்ஷன் வெளியேற்றப்படுகிறார் என்ற அறிவிப்பை கமல் அறிவித்தவுடன் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி ஆடியன்ஸ்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்

பிக்பாஸ் வீட்டில் மேலும் 4 சிறப்பு விருந்தினர்கள்

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக முதல் மற்றும் இரண்டாம் சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்கள் விருந்தினராக வருகை தந்து கொண்டிருந்தனர் என்பது தெரிந்ததே 

பிக்பாஸ் தர்ஷனின் முதல் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று தர்ஷன் எதிர்பாராத வகையில் வெளியேறினார். எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும் பிக்பாஸ், தர்ஷன் வெளியேற்றம் என்ற ஷாக் ட்ரீட்மெண்டை ஆடியன்ஸ்களுக்கு

'தளபதி 64' லோகேஷனை தேர்வு செய்த லோகேஷ் கனகராஜ்

விஜய் நடிக்கவிருக்கும் 64வது படமான 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக மாளவிகா மேனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர்

தமிழ் நடிகருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி கொடுத்த டிடிவி தினகரன்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தி அடைந்த நடிகர் ரஞ்சித் பாமகவில் இருந்து விலகி அதன் பின் அவர் தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்