கணவரை விவாகரத்து செய்கிறாரா நடிகை அசின்? வைரலான தகவலுக்கு இன்ஸ்டா பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமா ரசிகர்களிடையே கனவு கன்னியாக வலம்வந்த நடிகை அசின் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யப்போகிறார் என்பதுபோன்ற தகவல் ஊடகங்களில் வெளியானதை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முறையான விளக்கம் அளித்துள்ளார். இந்தத் தகவல் தற்போது ரசிகர்களிடையே பேசு பொருளாகியிருக்கிறது.
2001 இல் ஹீரோயினாக அறிமுகமாகிய நடிகை அசின் தமிழ் சினிமாவைத் தவிர , தெலுங்கு, மலையாள மொழி சினிமாக்களிலும் நடித்துள்ளார். நடிகர் சூர்யாவுடன் இவர் இணைந்து நடிந்திருந்த ‘கஜினி’ திரைப்படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அந்தப் படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிகை அசின் நடித்திருந்தார். இதன் மூலம் இந்தி சினிமாவில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்துவந்தன.
இயைடுத்து கடந்த 2016 இல் தொழில் அதிபர் ராகுல் ஷர்மாவை அவர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டே விலகி இருந்த அவருக்கு 2017 இல் ஆரின் என்ற பெண் குழந்தை பிறந்தததும் இதனால் தனது குழந்தை மற்றும் குடும்ப புகைப்படங்களை நடிகை அசின் அவ்வபோது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதையும் ரசிகர்கள் அறிந்தே இருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகை அசினின் கணவர் ராகுல் ஷர்மாவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் இதை நடிகை அசின் கண்டுபிடித்த நிலையில் அவரை விட்டு பிரிய முடிவெடுத்து இருப்பதாகவும் ஊடகங்களில் தவறான தகவல் வெளியாகியது. அதேநேரத்தில் நடிகை அசின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவரின் புகைப்படங்களை எல்லாம் டெலிட் செய்துவிட்டார் என்ற தகவலும் கூறப்பட்டது.
நடிகை அசினின் விவாகரத்து தகவல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் இதற்கு அவரே விளக்கம் அளித்திருக்கிறார். அதில், நாங்கள் கோடை விடுமுறையில் இருக்கிறோம். எதிரெதிராக அமர்ந்து எங்கள் காலை உணவை அனுபவித்து மகிழ்ச்சியாக சாப்பிட்டோம். சில கற்பனையான மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற செய்திகள் பரவி வருவதைப் பார்த்தோம்.
நாங்கள் எங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக வீட்டில அமர்ந்திருந்த நேரத்தில் நாங்கள் பிரிந்துவிட்டோம் என்பது போன்ற ஆதாரமற்ற தகவல் பரவிவருகிறது. இதனால் 5 நிமிடம் எங்களது சந்தோஷத்தை இழந்துவிட்டோம் என்று வருத்ததோடு இன்ஸ்டா ஸ்டோரியில் நடிகை அசின் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து நடிகை அசினின் விவாகரத்து தகவல் பொய்யானது என உறுதிப்படுத்திய ரசிகர்கள் தற்போது அமைதி அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments