கணவரை விவாகரத்து செய்கிறாரா நடிகை அசின்? வைரலான தகவலுக்கு இன்ஸ்டா பதில்!

  • IndiaGlitz, [Wednesday,June 28 2023]

தமிழ் சினிமா ரசிகர்களிடையே கனவு கன்னியாக வலம்வந்த நடிகை அசின் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யப்போகிறார் என்பதுபோன்ற தகவல் ஊடகங்களில் வெளியானதை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முறையான விளக்கம் அளித்துள்ளார். இந்தத் தகவல் தற்போது ரசிகர்களிடையே பேசு பொருளாகியிருக்கிறது.

2001 இல் ஹீரோயினாக அறிமுகமாகிய நடிகை அசின் தமிழ் சினிமாவைத் தவிர , தெலுங்கு, மலையாள மொழி சினிமாக்களிலும் நடித்துள்ளார். நடிகர் சூர்யாவுடன் இவர் இணைந்து நடிந்திருந்த ‘கஜினி’ திரைப்படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அந்தப் படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிகை அசின் நடித்திருந்தார். இதன் மூலம் இந்தி சினிமாவில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்துவந்தன.

இயைடுத்து கடந்த 2016 இல் தொழில் அதிபர் ராகுல் ஷர்மாவை அவர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டே விலகி இருந்த அவருக்கு 2017 இல் ஆரின் என்ற பெண் குழந்தை பிறந்தததும் இதனால் தனது குழந்தை மற்றும் குடும்ப புகைப்படங்களை நடிகை அசின் அவ்வபோது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதையும் ரசிகர்கள் அறிந்தே இருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை அசினின் கணவர் ராகுல் ஷர்மாவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் இதை நடிகை அசின் கண்டுபிடித்த நிலையில் அவரை விட்டு பிரிய முடிவெடுத்து இருப்பதாகவும் ஊடகங்களில் தவறான தகவல் வெளியாகியது. அதேநேரத்தில் நடிகை அசின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவரின் புகைப்படங்களை எல்லாம் டெலிட் செய்துவிட்டார் என்ற தகவலும் கூறப்பட்டது.

நடிகை அசினின் விவாகரத்து தகவல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் இதற்கு அவரே விளக்கம் அளித்திருக்கிறார். அதில், நாங்கள் கோடை விடுமுறையில் இருக்கிறோம். எதிரெதிராக அமர்ந்து எங்கள் காலை உணவை அனுபவித்து மகிழ்ச்சியாக சாப்பிட்டோம். சில கற்பனையான மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற செய்திகள் பரவி வருவதைப் பார்த்தோம்.

நாங்கள் எங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக வீட்டில அமர்ந்திருந்த நேரத்தில் நாங்கள் பிரிந்துவிட்டோம் என்பது போன்ற ஆதாரமற்ற தகவல் பரவிவருகிறது. இதனால் 5 நிமிடம் எங்களது சந்தோஷத்தை இழந்துவிட்டோம் என்று வருத்ததோடு இன்ஸ்டா ஸ்டோரியில் நடிகை அசின் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து நடிகை அசினின் விவாகரத்து தகவல் பொய்யானது என உறுதிப்படுத்திய ரசிகர்கள் தற்போது அமைதி அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வலியை எதிர்த்துப் போராடுவேன்… அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடிகர் பிருத்விராஜ் உருக்கம்!

மலையாளம், தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்துவரும் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டு இதனால் அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகி

இந்த வார ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து.. 4 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தது மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி வருகிறது

'பிச்சைக்காரன் 2' படத்தை அடுத்து விஜய் ஆண்டனியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவின் குரலுக்கு இவ்வளவு பவரா? லைக்ஸ்களை குவிக்கும் ஜிம் வீடியோ..!

லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்த பல திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்த டப்பிங் கலைஞர் தீபா வெங்கட் ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இந்த நடிகைக்கு மனநோயா? லேட்டஸ்ட் வீடியோவுக்கு குவியும் கண்டனங்கள்..!

பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் படு கிளாமரான வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் லேட்டஸ்ட் வீடியோவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. கு