இவ்வளவு விலையா? புதிய தொழில் துவங்கிய ஷாருக் மகன் ஆர்யன்கானை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்!

  • IndiaGlitz, [Tuesday,May 02 2023]

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் சமீபத்தில் புதிய ஆடை விற்பனை நிறுவனம் ஒன்றை துவங்கியிருந்தார். இதுகுறித்து ஆர்வம் தெரிவித்துவந்த நெட்டிசன்கள் பலரும் ஆன்லைனில் விற்பனை துவங்கியதை அடுத்து கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் கவுரிகான் தம்பதியரின் மூத்த மகன் ஆர்யன்கான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பலில் சென்றபோது போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு பின்னர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து தற்போது வலைத்தொடர் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் அவர் சமீபத்தில் ஆடை விற்பனை செய்யும் புதிய நிறுவனம் ஒன்றையும் துவங்கியிருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் D YAVOl X எனப்படும் இந்த நிறுவனம் ஏப்ரல் 30 ஆம் தேதி ஆன்லைனில் தனது விற்பனையைத் துவங்கியது. இதற்கான விளம்பரப் படத்தில் ஆர்யன்கானுடன் நடிகர் ஷாருக்கானும் நடித்திருந்தார். இதுகுறித்து கடும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்த ரசிகர்கள் பலரும் விற்பனை துவங்கியபோது அதன் விலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இவ்வளவு விலையா என கமெண்டுகளைப் பதிவிட்ட அவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் இதுபோன்ற ஆடைகளை வாங்க முடியுமா? என்று கேள்விகளையும் எழுப்பியிருந்தனர்.

அதாவது D YAVOl X எனப்படும் இந்த பிராண்டில் செய்யப்பட்ட ஒரு ஜாக்கெட்டின் விலை ரூ.2 லட்சத்திற்கும் ஒரு டீ சர்ட்டின் விலை ரூ.24,000 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் விற்பனை துவங்கிய முதல்நாளே நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்த நிலையில் தற்போது ஆடை முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் மீண்டும் அதன் விற்பனை விரைவில் துவங்கும் என்றும் ஆர்யன்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு விலை வைத்தப்பிறகும் ஆடைகள் விற்பனை ஆகிவிட்டதாக என ஆச்சர்யத்தை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

டூப் இன்றி அந்தரத்தில் பறந்து ஸ்டண்ட் காட்சியில் நடித்த பிரபல நடிகை.. வைரல் வீடியோ..!

பிரபல தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு அந்தரத்தில் பறந்து டூப் இன்றி ஸ்டண்ட் காட்சியில் தைரியமாக நடித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

பா ரஞ்சித் - விக்ரமின் 'தங்கலான்' : சூப்பர் அப்டேட் கொடுத்த ஸ்டுடியோ க்ரீன்..!

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த 'தங்கலான்' திரைப்படத்தின் சூப்பர் அப்டேட்டை இந்த படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தனது சமூக

கடும் சோதனையில் பூத்த கனவு… பரதநாட்டியத்தில் கலக்கும் திருநங்கை பொன்னி!

கலை எல்லோருக்கும் சமமானது என்று சாதித்து காட்டியிருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை பொன்னி

கை கொடுத்தது தப்பா? மைதானத்திலேயே மோதிக்கொண்ட விராத் கோஹ்லி மற்றும் கௌதம் காம்பீர்..!

நேற்றைய ஐபிஎல் போட்டி முடிவடைந்ததும் மைதானத்திலேயே பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் ஆகிய இருவரும் மோதிக்கொண்ட வீடியோ இணையதளங்களில்

'பொன்னியின் செல்வன் 2' வசூல் இத்தனை கோடியா? படக்குழுவினர்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வெள்ளி அன்று வெளியானது என்பதும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாசிட்டிவ் விமர்சனம்