'வாரிசு' இசை வெளியிட்டு விழா திட்டமிட்டபடி நடக்குமா? திடீரென ஏற்பட்ட சிக்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக தற்போது செட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை சென்றுள்ள நிலையில் இந்தியாவிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக ராகுல் காந்தி நடை பயணத்தை கூட ரத்து செய்ய காங்கிரஸ் கட்சியிடம் கோரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவும் அபாயம் இருப்பதால் அதிக கூட்டம் கூடும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் வரும் 24ஆம் தேதி நடைபெறும் ’வாரிசு’ இசை வெளியீட்டு விழாவிற்கும் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
ஆனால் இப்போதைக்கு ’வாரிசு’ இசை நிகழ்ச்சிக்கு எந்த இதமான பிரச்சனையும் இல்லை என்றும் அந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும் என்றுதான் கோலிவுட்டில் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே இரண்டு ஆண்டுகளுக்கு பின் விஜய்யின் குட்டிக்கதையை அவரது ரசிகர்கள் கேட்பது உறுதி என்று கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த இரண்டு நாட்களில் ஏதேனும் பிரச்சனை வருமா? அப்படியே வந்தாலும் அதை படக்குழுவினர் எப்படி சமாளிக்க போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments