'பேட்ட' வேலைனின் மகன் தான் 'ஜகமே தந்திரம்' சுருளியா? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’பேட்ட’ படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’பேட்ட’ படத்தில் இடம்பெற்றுள்ள ரஜினியின் கேரக்டரான ’வேலன்’ கேரக்டரின் கெட்டப் போன்ற ’ஜகமே தந்திரம்’ படத்தில் உள்ள தனுஷின் கேரக்டரான ‘சுருளி’ இருப்பதால் ’பேட்ட’ படத்திற்கும் ’ஜகமே தந்திரம்’ படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக சமூகவலைதளங்களில் பலர் எழுதி வந்தனர்.
ஒரு சிலர் ’பேட்ட’ வேலனின் மகன்தான் ’ஜகமே தந்திரம்’ சுருளி என்றும் அல்லது ’பேட்ட’ வேலனின் சிறுவயது கதாபாத்திரம்தான் ’ஜகமே தந்திரம்’ சுருளி என்றும் கார்த்திக் சுப்புராஜ் இடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து விளக்கமளித்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இந்த இரண்டு கேள்விகளுக்கும் என்னுடைய பதில் ’இல்லை’ என்பதுதான் என்று கூறியுள்ளார். ’பேட்ட’ படத்திற்கும் ஜகமே தந்திரம் படத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் இரண்டு படங்களின் கதைகளின் வேறு வேறு என்றும் அவர் விளக்கம் அளித்து இது குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout