அஜித் உதவி செய்தாரா? இல்லையா? மாறுபட்ட கருத்துக்களால் குழப்பம்

  • IndiaGlitz, [Thursday,May 03 2018]

அஜித் யாருக்கும் தெரியாமல் செய்த உதவிகள் பல என்றும், அந்த உதவிகள் ஒருசில ஆண்டுகள் கழித்து உதவி பெற்றவர்களே கூறும்போதுதான் அது வெளியுலகிற்கு தெரிய வரும் என்றும் கூறப்படுவதுண்டு. இந்த நிலையில் அஜித் ஒரு உதவி இயக்குனருக்கு உதவி செய்தாரா? இல்லையா? என்பது குறித்த ஒரு விவாதம் காரசாரமாக கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

அஜித் பிறந்த தினத்தில் அவருக்கு வாழ்த்து கூறிய இயக்குனர் சுசீந்திரன், தான் உதவி இயக்குனராக இருந்தபோது தன்னுடைய சக உதவி இயக்குனர் ரோஜாரமணன் என்பவர் உடல்நலமின்றி இருந்ததாகவும், அவருக்கு அஜித் ஒரு பெரிய தொகையை கொடுத்து உதவி செய்ததாகவும் கூறினார்.

ஆனால் இலக்கியன் என்பவர் தன்னுடைய முகநூலில் அஜித்திடம் சுசிந்திரனுடன் தானும் அந்த உதவி இயக்குனருக்காக உதவி கேட்க சென்றது உண்மைதான் என்றும் ஆனால் அஜித் பண உதவி செய்யவில்லை என்றும், சுசீந்திரன் விளம்பரத்திற்காக தவறான தகவலை பதிவு செய்வதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆனால் சுசீந்திரனுடன் அஜித்தை பார்க்க சென்ற இன்னொரு இயக்குனரான ரமேஷ் சுப்பிரமணியன் என்பவர் இந்த சம்பவம் நடந்தபோது தான் உடனிருந்ததாகவும், அஜித் ரோஜாரமணன் ஆபரேசனுக்கு தேவையான பணம் முழுவதையும் கொடுக்க தயாராக இருந்ததாகவும், ஆனால் ஆபரேசன் செய்யும் அளவிற்கு அவருடைய உடல்நலம் இல்லாததால் மருத்துவ செலவிற்கு மட்டும் தனது மேனேஜர் மூலம் ரூ.20 ஆயிரம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

ரோஜாரமணன் சிகிச்சைக்கு அஜித் செய்ததாகவும், உதவி செய்யவில்லை என்றும் இருவேறு கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உதவி பெற்றதாக கூறப்படும் ரோஜாரமணன் தற்போது உயிருடன் இல்லை. இந்த நிலையில் அஜித்தே முன்வந்து இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று கூறினால்தான் உண்மை தெரியவரும். ஆனால் அது சாத்தியமில்லை என்பதால் இந்த உதவி விவகாரம் கடைசி வரை கேள்விக்குறியோடு தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மே தினத்தில் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி, மைதானத்தில் பேட்ஸ்மேனாக ஆக்ரோஷமாகவும், கேப்டனாக கூலாகவும் செயல்படுவதால் தான் அவருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது.

வைரலாகும் பாடகியின் பிகினி புகைப்படம்

அஜித் நடித்த 'பில்லா' படத்தில் இடம்பெற்ற 'செய் ஏதாவது செய்', யோகி' படத்தில் இடம்பெற்ற 'யோகி யோகிதான்' உள்பட பல தமிழ்,  தெலுங்கு, இந்தி பாடல்களை பாடிய பாடகி நேஹா பாசின்.

அவெஞ்சர் படம் பார்த்து மாரடைப்பால் மரணம் அடைந்த இந்திய ரசிகர்

மார்வல் சூப்பர் ஹீரோக்கள் திரைப்பிரவேசத்தின் பத்தாவது ஆண்டுக் கொண்டாட்டமாக சமீபத்தில் உலகம் வெளியாகியுள்ள அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ என்ற ஹாலிவுட் திரைப்படம்

மொபைல் போனால் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவி

மொபைல் போன் பயன்படுத்திய கல்லூரி மாணவி ஒருவரை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த அந்த கல்லூரி மாணவி ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

உலக லெவன் டி-20 அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்

கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் வீசிய இரண்டு கடுமையான புயல்கள் காரணமாக அந்நாட்டின் ஐந்து கிரிக்கெட் மைதானங்கள் கடுமையாக சேதம் அடைந்தன