'திரெளபதி' பட இயக்குனருக்கு அஜித் வாழ்த்து தெரிவித்தாரா? பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Monday,January 13 2020]

சமீபத்தில் வெளியான ’திரெளபதி’ பட ட்ரெய்லர் எந்த அளவு சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்குவதாக இன்னொரு தரப்பினர் கேலியும் கிண்டலும் செய்ததால் சமூக வலைதளங்களில் ஒரு சமுதாய போரே நடந்தது

இது குறித்து இயக்குனர் ஜி.மோகன் அவ்வப்போது விளக்கம் அளித்த போதிலும் இந்த விவாதங்கள் முற்றுப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றுவது போல் ’திரெளபதி’ படத்திற்கு தல அஜித் வாழ்த்து தெரிவித்ததாகவும், அஜித்தும் இயக்குனர் மோகனும் இணைந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டதாகவும், ஒரு வதந்தி மிக வேகமாக பரவியது. இதனை உறுதி செய்யும் வகையில் அஜீத், ஜி.மோகன் இணைந்து எடுத்த புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலானது

இந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் ஜி.மோகன் தனது சமூக வலைத்தளபக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: வதந்திகளை நம்பாதீர்.. திரெளபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே’ என்று கூறியுள்ளார்.

More News

CAA - க்கு விவாதம் கட்டாயம் தேவை.. NRC நாட்டிற்கு தேவையே இல்லை..! நிதிஷ் குமார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்து எந்த கேள்வியும் தேவையில்லை என்ற அவர், அதனை மாநிலத்தில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று உறுதியாக கூறினார். 

விசாவை தவறவிட்ட இந்திய மாணவி.. தேடி கண்டுபிடித்து ஒப்படைத்த பாகிஸ்தான் ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு..!

துபாயில் யு.கே. மாணவர் விசாவை இந்தியப் பெண் காரில் தவறவிட்டார். அவரைத் தேடிச் சென்று விசாவை ஒப்படைத்த பாகிஸ்தான் ஓட்டுனருக்குப் பாராட்டுகள் குவிந்தன.

பிரதமர் மோடியின் CAA கருத்துக்கு பதில் கூற முடியாது.. நாங்கள் அரசியல் மற்றும் மதச்சார்பற்றவர்கள் - ராமகிருஷ்ண மடம்..!

'பிரதமரின் பேச்சு குறித்து நாங்கள் கருத்தேதும் தெரிவிக்க முடியாது. நாங்கள் முற்றிலும் அரசியலற்ற அமைப்பு. இங்கு அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்'"

என் வயது முக்கியமில்லை.. மக்களுக்காக நான் செய்யும் பணி தான் முக்கியம்..! அமித்ஷாவுக்கு ம.பி முதல்வர் பதிலடி.

நாங்கள் எங்கள் பணிகளை நம்புகிறோம். வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதில்லை. மக்கள் என் பணியைத்தான் பார்க்கிறார்களே தவிர, என் வயதை இல்லை.

கேபிள் டிவியில் ஒளிபரப்பான 'தர்பார்': அதிர்ச்சியில் படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் கடந்த நான்கு நாட்களில் 128 ரூபாய் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.