சீரியலில் இருந்து விலகுகிறாரா நடிகை ப்ரீத்தி சர்மா.
Send us your feedback to audioarticles@vaarta.com
ப்ரீத்தி சர்மா ஒரு இந்திய தமிழ் மற்றும் தெலுங்கு நடிகை ஆவார்.சித்தி 2 சீரியலில் வெண்பாவாக தன் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து புகழ் பெற்றவர்.
இவர் கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் தொடரில் அனிதாவாக அறிமுகம் ஆனார் மற்றும் அறுவடை திரைப்படத்தில் நடித்துள்ளார்.டிக் டாக் பான் செய்வதற்கு முன்பு வரை அதில் பிரபலமான ஒருவராக இருந்தார்.நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக இவர் படிப்பை நிறுத்தி விட்டு மாடலிங் துறையில் நுழைந்தார்.மேலும்,
மிஸ் கைத்தறி போட்டியில் 2017 ஆம் ஆண்டு மூன்றாம் இடத்தை பிடித்தார்.இவர் தற்போது சன் டிவியில் மலர் சீரியலில் கதாநாயகியாக நடித்து கொண்டிருந்தார்.ஆனால் இவர் சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு ஒன்றில் நான் சீரியலை விட்டு விலக போவதாக கூறி இருந்தார்.
பொதுவாகவே ஒரு சீரியலில் ஒரு கதாபாத்திரத்திற்கு பதிலாக வேறு கதாபாத்திரத்தை ஒரு சில காரணங்களுக்காக நடிக்க வைப்பது வாடிக்கை.அதிலும் துணை கதாபாத்திரம் மாறுவதே அந்த சீரியலுக்கு ஒரு பாதிப்பை கொடுக்கும்.
ஆனால் ப்ரீத்தி சர்மா மலர் சீரியலின் முக்கிய கதாநாயகி பாத்திரத்தில் நடித்து தற்போது விலகுவது பலரை வருத்தத்திற்கு ஆழ்த்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com
Comments