பணப்பெட்டியை நோக்கி செல்லும் ஆரி: பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி வாரத்தில் பணப்பெட்டி ஆப்சன் கொடுக்கப்படும் என்பதும் பிக்பாஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் அந்த பண பெட்டியை எடுத்துக்கொண்டு விலகிக் கொள்ளலாம் என்ற ஆப்ஷன் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் என்பதும் கடந்த சீசனில் கூட பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு கவின் போட்டியில் இருந்து விலகி வெளியே சென்றார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் அதே போன்ற ஒரு ஆப்ஷன் இந்த சீசனிலும் வரவிருப்பதாகவும் பணப்பெட்டியை ரம்யா பெற்றுக்கொண்டு வெளியேறியதாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் இது குறித்த புரோமோ விடியோ சற்று முன் வெளியாகி உள்ளது. அதில் ரூபாய் 5 லட்சம் பண பெட்டியை வைத்து பிக்பாஸ் ஆப்சன் கொடுப்பதாகவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஒருவர் அந்த பண பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என்று தெரிவிக்கும் காட்சியும் உள்ளது
இந்த நிலையில் திடீர் திருப்பமாக டைட்டில் வின்னர் என மக்களால் உறுதி செய்யப்பட்ட ஆரி, 5 லட்சம் கொண்ட பணப்பெட்டி அருகே சென்று சில வார்த்தைகள் பேசும் காட்சிகளுடன் இன்றைய 2-வது புரமோ முடிவடைந்ததால் ஆரியின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
ஆனால் அவர் பண பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறாரா? அல்லது பணப்பெட்டியை யாரும் எடுக்க வேண்டாம், அனைவரும் விளையாடி யாருக்கு திறமை இருக்கின்றதோ அவர்கள் டைட்டில் வின் பண்ணுவோம் என்று அறிவுரை கூறுகிறாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments