ரஜினி கட்சிக்கு 24 மணி நேரத்தில் 50 லட்சம் ரிஜிஸ்ட்ரேசன் சாத்தியமா?

  • IndiaGlitz, [Wednesday,January 03 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பை வெளியிட்டதோடு அதற்கு மறுநாள் இணையதளம் மற்றும் செயலி ஆரம்பித்து அதில் மன்ற உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

ரஜினியின் செயலியில் மிக வேகமாக ரிஜிஸ்ட்ரேஷன் நடந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் 24 மணி நேரத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டதாக ஒருசில ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. அதே நேரத்தில் இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது. 24 மணி நேரத்தில் 50 லட்சம் பதிவுகள் என்றால் சராசரியாக ஒரு மணி நேரத்தில் இரண்டு லட்சம் பதிவுகள், ஒரு நிமிடத்தில் 3300 பதிவுகள் நடந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இது சாத்தியமா? கம்ப்யூட்டர் சர்வர் இதற்கு ஒத்துழைக்குமா? என்பதையும் யோசித்து பார்க்க வேண்டும்

அதே நேரத்தில் செயலி மற்றும் இணையதளம் ஆகிய இரண்டிலும் உறுப்பினர் பதவி நடைபெற்று வருவதால் அதிக அளவிலான பதிவுகள் பதிவாகியிருக்க வாய்ப்புகளும் உள்ளது. ரஜினி மன்ற நிர்வாகி ஒருவரே தனது டுவிட்டரில் 'ரஜினியின் செயலி டவுன்லோடு எண்ணிக்கை 50 ஆயிரம் என்றும், அதிகாரபூர்வமாக இதுவரை 3 லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சந்தேகங்கள் எழாமல் இருக்க எத்தனை உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர் என்பதை இணையதளத்திலேயே பார்க்கும் வசதியை ரஜினி மன்ற நிர்வாகிகள் ஏற்பாடு செய்வதே சரியானதாக இருக்கும் என்பது பலருடைய கருத்தாக உள்ளது.
 

More News

டிரம்ப் தரும் பத்திரிகையாளர் விருது நம்மூருக்கு கிடைக்குமா?

அமெரிக்க அதிபர்களில் கடந்த ஆண்டு பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் முற்றிலும் வேறுபட்டவராக உள்ளார். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் வித்தியாசமானதாகவும், சர்ச்சைக்குரியதாகவும் இருந்து வருகிறது

யாருடைய பட்டனால் உலகம் அழியப்போவுது? அச்சத்தில் பொதுமக்கள்

கடந்த சில மாதங்களாகவே வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் எந்த நேரத்திலும் இருநாடுகளுக்கு இடையே போர் மூளூம் அபாயம் உள்ளது.

புகழ்ச்சியா? வஞ்சப்புகழ்ச்சியா? ரஜினி குறித்து பிரபல இயக்குனரின் டுவீட்

ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து தமிழக, ஊடகங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களும் தலைப்பு செய்தியில் வெளியிட்டு வரும் நிலையில் ரஜினியின் அரசியல் நிலை குறித்து க

'தளபதி 62' படத்தின் முதல்-முக்கிய பணி ஆரம்பம்

தளபதி விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளதாக ஏற்கனவே வெளியான செய்திகளை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

அரசியல் எண்ட்ரி குறித்த ராகவா லாரன்ஸ் முடிவில் திடீர் மாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ள நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்,