ரஜினி கட்சிக்கு 24 மணி நேரத்தில் 50 லட்சம் ரிஜிஸ்ட்ரேசன் சாத்தியமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பை வெளியிட்டதோடு அதற்கு மறுநாள் இணையதளம் மற்றும் செயலி ஆரம்பித்து அதில் மன்ற உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
ரஜினியின் செயலியில் மிக வேகமாக ரிஜிஸ்ட்ரேஷன் நடந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் 24 மணி நேரத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டதாக ஒருசில ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. அதே நேரத்தில் இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது. 24 மணி நேரத்தில் 50 லட்சம் பதிவுகள் என்றால் சராசரியாக ஒரு மணி நேரத்தில் இரண்டு லட்சம் பதிவுகள், ஒரு நிமிடத்தில் 3300 பதிவுகள் நடந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இது சாத்தியமா? கம்ப்யூட்டர் சர்வர் இதற்கு ஒத்துழைக்குமா? என்பதையும் யோசித்து பார்க்க வேண்டும்
அதே நேரத்தில் செயலி மற்றும் இணையதளம் ஆகிய இரண்டிலும் உறுப்பினர் பதவி நடைபெற்று வருவதால் அதிக அளவிலான பதிவுகள் பதிவாகியிருக்க வாய்ப்புகளும் உள்ளது. ரஜினி மன்ற நிர்வாகி ஒருவரே தனது டுவிட்டரில் 'ரஜினியின் செயலி டவுன்லோடு எண்ணிக்கை 50 ஆயிரம் என்றும், அதிகாரபூர்வமாக இதுவரை 3 லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சந்தேகங்கள் எழாமல் இருக்க எத்தனை உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர் என்பதை இணையதளத்திலேயே பார்க்கும் வசதியை ரஜினி மன்ற நிர்வாகிகள் ஏற்பாடு செய்வதே சரியானதாக இருக்கும் என்பது பலருடைய கருத்தாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments