இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் ஆச்சரியமான ஓப்பனிங் வசூல்

  • IndiaGlitz, [Monday,May 07 2018]

கவுதம் கார்த்திக், வைபவி, யாஷிகா நடிப்பில் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய அடல்ட் காமெடி திரைப்படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி இளைஞர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் சென்னை ஓப்பனிங் வசூல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் 19 திரையரங்க வளாகங்களில் 227 காட்சிகள் திரையிடப்பட்ட இந்த படம் ரூ.1,08,62,088  வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்துள்ளனர்.

இதுவரை வெளிவந்த கவுதம் கார்த்திக் படங்களில் ஓப்பனிங் வசூலை பொருத்தவரையில் இந்த படம் தான் பெஸ்ட் என்று கூறும் அளவிற்கு இந்த படம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கஸ்தூரி மகாலிங்கத்தை டாக்டர் ஆக்குவது நமது கடமை: விஷால்

இந்தியா முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்த நிலையில் முக்கிய குழப்பமாக தமிழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர்

11ஆம் வகுப்பு பாடத்தில் சிம்பொனி தமிழரும், ஆஸ்கார் தமிழரும்

வரும் கல்வியாண்டு முதல் தமிழக பள்ளிகளில் உள்ள 1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது என்பது தெரிந்ததே.

தந்தை இறந்தது தெரியாமல் நீட் தேர்வு எழுதி வரும் தமிழ் மாணவர்

நீட் தேர்வை கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் எழுதி வரும் தமிழ் மாணவர் ஒருவர் தனது தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வை எழுதி வருகிறார்

பட வாய்ப்புக்காக படுக்கை குறித்து கருத்து கூறிய சமந்தா

திரையுலகில் பட வாய்ப்புகாக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இருப்பதாக அவ்வப்போது எழுந்து வரும் புகார்களின் மூலம் தெரியவருகிறது.

3 பக்க தமிழ் வசனத்தை ஒரே டேக்கில் ஓகே செய்த விஜய்

சமீபத்தில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, தமிழில் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் 'நோட்டா' என்ற படத்தில் நடித்து வருகிறார்