சில்க் ஸ்மிதா கதையில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' நடிகை.. 3 நிமிட கிளிம்ப்ஸ் வீடியோ..!
- IndiaGlitz, [Monday,December 02 2024]
மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் 66 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நாளில், சில்க் ஸ்மிதாவின் கதை அம்சத்துடன் உருவாகியுள்ள புதிய படத்தில், ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்த நடிகை நடித்து இருப்பதாக அறிவிக்கப்பட்டு, படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய கவர்ச்சி நடிகையாக இருந்த சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை ஒட்டி, ’சில்க் ஸ்மிதா குயின் ஆப் சவுத்’ எனும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தொடர்பான சிறிய வீடியோ கிளிப்சை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
எஸ்.டி.ஆர்.ஐ சினிமா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஜெயராம் என்பவர் இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில்க் ஸ்மிதாவின் கதாபாத்திரத்தில் சந்திரிகா ரவி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இதற்கு முன்பு வித்யா பாலன் நடித்த ’டர்ட்டி பிக்சர்ஸ்’, சனாகான் நடித்த ‘க்ளைமாக்ஸ்’ போன்ற பல படங்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இன்னொரு படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.