'இருட்டு அறையில் முரட்டு குத்து' இயக்குனருடன் மீண்டும் இணையும் கெளதம் கார்த்திக்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் சந்தோஷ்குமார் இயக்கிய இரண்டு அடல்ட் திரைப்படங்களான ‘ஹர ஹர மகாதேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களில் நடித்தவர் கௌதம் கார்த்திக். இதனை அடுத்து ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க கவுதம் கார்த்திக்கை இயக்குனர் அணுகியபோது அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது
இதனை அடுத்து சந்தோஷ் ஜெயக்குமாரே இந்த படத்தை இயக்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில வாரங்களாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன என்பது தெரிந்ததே
இந்த நிலையில் ’இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கௌதம் கார்த்திக் நாளை மாலை 6 மணிக்கு தனது சமூக வலைதளத்தில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க மறுத்த கௌதம் கார்த்திக் குறைந்தபட்சம் அந்த படத்தின் டைட்டிலை வெளியிட முன் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சந்தோஷ் ஜெயக்குமார், மீனால் சாஹூ, ஷாலு ஷம்மு உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை தரன் குமார் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
The Sensational #HHMDK & #IAMK Director @santhoshpj21's next film first look to be revealed by @Gautham_Karthik tomorrow at 6 PM! #IAMK2FirstLook #AdultsOnly @Danielanniepope @Rockfortent @Meenal_Sahu27 @tsk_actor @dharankumar_c @harikoms @ShaluShamu @proyuvraaj pic.twitter.com/uleEA83B6D
— Diamond Babu (@idiamondbabu) September 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments