மாதவனின் 'இறுதிச்சுற்று' சென்சார் விபரங்கள்

  • IndiaGlitz, [Thursday,December 31 2015]

மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'இறுதிச்சுற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.


இந்நிலையில் வரும் ஜனவரி 4ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறவுள்ளது என்பதையும், இந்த விழாவில் இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூர்யா கலந்து கொள்ளவுள்ளனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படம் இன்று சென்சார் அதிகாரிகளால் சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சர்டிபிகேட் வழங்கியுள்ளனர். இந்த படத்திற்கு யூ' சர்டிபிகேட் கிடைத்துள்ளதால் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை கிடைக்க வாய்ப்பு இருப்பதால் தயாரிப்பாளர் உள்பட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

More News

லிங்குசாமிக்கு 2வது முறையாக கைகொடுத்த பென் மூவீஸ்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் லிங்குசாமி தயாரித்திருந்தார்...

2015-ல் சின்ன பட்ஜெட்டில் வெளியான சிறப்பான திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து படம் எடுக்கும் டிரெண்ட் தற்போது வந்துவிட்டது. ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்றால் திரையில் பிரமாண்டத்தை காட்ட வேண்டும், அந்த பிரமாண்டத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்ற...

தமிழ் சினிமாவில் ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து படம் எடுக்கும் டிரெண்ட் தற்போது வந்துவிட்டது. ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்றால் திரையில் பிரமாண்டத்தை காட்ட வேண்டும்....

36 வயதினிலே, பசங்க-2 வெற்றிக்கு நன்றி தெரிவித்த சூர்யா

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் இதுவரை '36 வயதினிலே' மற்றும் 'பசங்க-2' ஆகிய இரண்டு படங்களை தயாரித்துள்ளது...

பாலா படத்தை அடுத்து