close
Choose your channels

மாதவனின் 'இறுதிச்சுற்று' ரிலீஸ் தேதி?

Tuesday, December 15, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாதவன் நடித்து வரும் 'இறுதிச்சுற்று' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்டதாக தற்போது படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வந்துள்ளது. பாக்ஸிங் வீரராக மாதவன் நடிக்கும் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை மறுநாள் இணையதளங்களில் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் பொங்கலை அடுத்து ஜனவரி 29ஆம் தேதி ரிலீசாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் இந்த படத்தில் மாதவன், ரித்திகாசிங், நாசர், ராதாரவி, காளிவெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும் சதீஷ் சூர்யா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

இதர்கு முன்னர் மாதவன் நடித்த 'வேட்டை' படம் கடந்த 2012-ல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment