விஜய்சேதுபதியுடன் நடிக்கும் குத்துச்சண்டை நாயகி

  • IndiaGlitz, [Saturday,February 27 2016]

விஜய்சேதுபதி நடித்த 'நானும் ரெளடிதான்', 'சேதுபதி' ஆகிய படங்கள் நல்ல வெற்றி பெற்றுள்ளதை அடுத்து வரும் மார்ச் 11-ஆம் தேதி அவர் நடித்த மற்றொரு படமான 'காதலும் கடந்து போகும் திரைப்படம்' ரிலீஸ் ஆகிறது. ஹாட்ரிக் வெற்றியை விஜய்சேதுபதி பெறுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் காக்கா முட்டை' இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.


'ஆண்டவன் கட்டளை' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' படத்தில் குத்துச்சண்டை வீராங்கனை வேடத்தில் நடித்த உண்மையான வீராங்கனையான ரித்திகாசிங்தான் 'ஆண்டவன் கட்டளை' படத்தின் ஹீரோயின் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

இந்த தகவலை உறுதுப்படுத்துவதுபோல் இயக்குனர் மணிகண்டனுடன் ரித்திகாசிங் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. விஜய்சேதுபதி, ரித்திகா சிங், மணிகண்டன் என வெற்றிப்படங்கள் கொடுத்த நட்சத்திரங்கள் ஒரே படத்தில் இணைவதால் இந்த படம் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

மனைவியை அழவைக்க விரும்பாத ஆடுகளம் முருகதாஸ்

'வெற்றிமாறன்' இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'விசாரணை' திரைப்படம் தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களால்...

'தல'க்கனம் இல்லாத 'தல அஜித்'. தேவா பாராட்டு

'தல' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித்தின் நடிப்பை ரசித்து அவருக்கு ரசிகர்களாக மாறியவர்களை விட அவருடைய அன்புக்கும் குணத்திற்கும்...

இறுதிக்கட்ட பணியில் விஜய்யின் 'தெறி'

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள தெறி' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும்...

அட்லியின் அடுத்த படத்தில் ஜீவா

ஜீவாவின் 25வது படமான 'போக்கிரி ராஜா' ரிலீஸுக்கு தயாராகி வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் அவர் நடித்து வரும் 'திருநாள்'...

இயக்குனராக மாறிய விஜய் ரசிகர்

இளையதளபதி விஜய்யின் பெயருக்கே ஒரு கிரேஸ் உண்டு என்பதை அவருடைய தந்தை எஸ்.ஏ.சி கூறியதை சற்று முன்னர் பார்த்தோம்...