close
Choose your channels

இரண்டே நாட்களில் 'இருமுகன்' டீசர்.

Wednesday, July 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் முதன்முதலாக இருவேடங்களில் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளதால் இந்த படத்தின் டீசர், டிரைலர், இசை வெளியீடு மற்றும் பட ரிலீஸ் குறித்த தேதிகளை ஒவ்வொன்றாக அறிவிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முதல்கட்டமாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'ஹெலெனா' என்று தொடங்கும் பாடலின் டீசர் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள்து.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த பாடல் ஜூலை 16 அன்று இரவு 7 மணிக்கு இணணயதளங்களில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த பாடலின் டீசர் வெளியாக இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில் இந்த டீசரை வரவேற்க விக்ரம் மற்றும் நயன்தாரா ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.
விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பிராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை 'அரிமாநம்பி' பட இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கி வருகிறார். ஷிபுதமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதியில் ஆகஸ்ட் மாதத்தில் இசைவெளியீடும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment