'AAA' தயாரிப்பாளருக்கு விஷால் கொடுத்துள்ள வாக்குறுதி

  • IndiaGlitz, [Friday,January 19 2018]

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான AAA' படுதோல்வி அடைந்ததால் இந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேன் ராயப்பன் அவர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. சிம்புவால் தான் இந்த நஷ்டம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மைக்கேல் ராயப்பன் தயாரித்த அடுத்த படமான 'கீ' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய விஷால், 'AAA' படம் குறித்த குற்றச்சாட்டுக்கு சிம்புவிடம் இருந்து இதுவரை விளக்கம் வரவில்லை என்று கூறிய விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்களுக்காக சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடித்து தர நான் தயார். படப்பிடிப்பு, பிசினஸ் என அனைத்தும் முடிந்த பின்னர் அவரே எனது சம்பளமாக கொடுக்கும் தொகையை பெற்று கொள்வேன்' என்று கூறியுள்ளார். மேலும் 'கீ' திரைப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகயுள்ளதால் நான் நடித்த 'இரும்புத்திரை' படத்தை அதே தேதியில் வெளியிட மாட்டேன்' என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஜீவா, நிக்கி கல்ராணி, சுஹாசினி, ஆர்ஜே பாலாஜி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'கீ' திரைப்படத்தை காளீஸ் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவும், நாகூரான் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.