விஷாலின் 'இரும்புத்திரை'யில் இணைந்த ஷிபுதமீன்ஸ்

  • IndiaGlitz, [Wednesday,November 29 2017]

விஜய் நடித்த 'புலி', விக்ரம் நடித்த 'இருமுகன்' போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஷிபுதமீன்ஸ் தற்போது விஷால் நடித்து வரும் 'இரும்புத்திரை' படத்தில் இணைந்துள்ளார். 

விஷால் நடித்து வரும் இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் விறுவிறுப்பாக தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் 'இரும்புத்திரை' படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை தயாரிப்பாளர் ஷிபுதமீன்ஸ் பெற்றுள்ளார். விஷாலின் முந்தைய படங்களான 'துப்பறிவாளன்' மற்றும் 'வில்லன்' ஆகிய படங்கள் கேரளாவில் நல்ல வசூலானதை தொடர்ந்து கேரளாவில் விஷாலின் மார்க்கெட் உயர்ந்துள்ளதாகவும், எனவே 'இரும்புத்திரை' படம் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் ஷிபுதமீன்ஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தில் விஷால், அர்ஜூன், சமந்தா, மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.எஸ்.மித்ரன் இயக்கி வரும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும் ரூபன் படத்தொகுப்பும் செய்கிறார்கள். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

விஷ்ணுவின் அடுத்த பட நாயகி இவர்தான்

கோலிவுட் திரையுலகில் இளையதலைமுறை நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் விஷ்ணு. கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை

டீசரில் தளபதி, டிரைலரில் தல: அஞ்சலியின் 'பலூன்' பறப்பது எப்போது?

ஜெய், அஞ்சலி நடித்த 'பலூன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

அன்புச்செழியனை கெட்ட வார்த்தையால் திட்டியது ஏன்? பூர்ணா விளக்கம்

நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமானவர் என்று காவல்துறையினர்களால் தேடப்பட்டு வரும் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு திரையுலகில் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது.

'டிக் டிக் டிக்' படத்தில் இணைந்த இரண்டு இசையமைப்பாளர்கள்

ஜெயம் ரவி நடிப்பில் சக்தி செளந்தராஜன் இயக்கி வரு 'டிக் டிக் டிக்' திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை இசையமைப்பாளர் டி.இமான் அறிவிப்பார்

டிஐஜி ரூபா மீது ரூ.20 கோடி அவமதிப்பு வழக்கு

சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாகவும், இதில் ரூ.2 கோடி வரை லஞ்சமாக பெறப்பட்டிருப்பதாகவும் சிறைத்துறை டிஜிபி மீது, பெங்களூர் சிறைத்துறை டிஐஜி ஆக பணிபுரிந்த ரூபா ஐபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார்.