இந்தியாவில் முதல் முயற்சி எடுக்கும் விஷாலின் 'இரும்புத்திரை
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடிப்பில் வரும் 11ஆம் தேதி வெளிவரவுள்ள இரும்புத்திரை' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் புரமோஷன்கள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இராணுவ வீரர்கள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படம் மாஸ் ஆக்சன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை இல்லாத புதுவகை முயற்சியை 'இரும்புத்திரை' படக்குழுவினர் எடுத்துள்ளனர். அதாவது இந்த படத்தின் முதல் பாதி மட்டும் வரும் 9ஆம் தேதி பத்திரிகையாளர் காட்சியாக திரையிடப்படவுள்ளது. இரண்டாம் பாதி மே 11ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் தினத்தில் திரையிடப்படும். ஹாலிவுட்டில் இந்த வழக்கம் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் இந்தியாவில் இந்த புதிய முயற்சி இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால், சமந்தா, ஆக்சன்கிங் அர்ஜூன், மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் பிலிம்பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments