இந்தியாவில் முதல் முயற்சி எடுக்கும் விஷாலின் 'இரும்புத்திரை

  • IndiaGlitz, [Friday,May 04 2018]

விஷால் நடிப்பில் வரும் 11ஆம் தேதி வெளிவரவுள்ள இரும்புத்திரை' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் புரமோஷன்கள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இராணுவ வீரர்கள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படம் மாஸ் ஆக்சன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை இல்லாத புதுவகை முயற்சியை 'இரும்புத்திரை' படக்குழுவினர் எடுத்துள்ளனர். அதாவது இந்த படத்தின் முதல் பாதி மட்டும் வரும் 9ஆம் தேதி பத்திரிகையாளர் காட்சியாக திரையிடப்படவுள்ளது. இரண்டாம் பாதி மே 11ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் தினத்தில் திரையிடப்படும். ஹாலிவுட்டில் இந்த வழக்கம் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் இந்தியாவில் இந்த புதிய முயற்சி இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால், சமந்தா, ஆக்சன்கிங் அர்ஜூன், மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  விஷால் பிலிம்பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.
 

More News

ஓட்டுக்கு ஐயாயிரம், நீட்டுக்கு ஆயிரமா? நடிகை கஸ்தூரி காட்டம்

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் தனது தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் இருந்து வெளிமாநிலத்திற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 தருவதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். 

'காலா' இசை வெளியீடு நடைபெறும் இடம் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் 9ஆம் தேதி நடைபெறும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார்

நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு குவியும் உதவிக்கரம்

தமிழக மாணவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதற்காகவே ராஜஸ்தான் உள்பட வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மையங்களை சி.பி.எஸ்.இ. அமைத்து பழிவாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒயின்ஷாப் வைக்க இடமிருக்கு, நீட் தேர்வு எழுத இடமில்லையா? பிரபல இயக்குனர் ஆவேசம்

இந்தியாவிலேயே தமிழக மாணவர்கள் சிலருக்கு மட்டும் வெளிமாநிலங்களில் அதுவும் ராஜஸ்தான் போன்ற தொலைதூர மாநிலங்களில் நீட் தேர்வு மையத்தை சி.பிஎஸ்.இ. அமைத்துள்ளது

ரயில் கழிவறை நீரை டீயில் கலந்த விவகாரம்: ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை

ரயில் கழிப்பறையில் உள்ள தண்ணீரை தேநீர் தயாரிக்க எடுத்த டீ விற்பனையாளர் வீடியோ ஒன்று கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது