தூக்கி போட போறீங்களா.. இல்ல முடிச்சு போட போறீங்களா..'இறுகப்பற்று' டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒருவரை ஒருவர் காதலிக்கும்போது அன்புடனும் பாசத்துடனும் இருப்பது, ஆனால் திருமணம் ஆனபின் ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு ஒட்டாமல் இருப்பது ஆகியவை குறித்த கதையம்சம் தான் இந்த ‘இறுகப்பற்று’ படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.
மூன்று ஜோடிகள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் திருமண வாழ்க்கை, திருமணத்திற்கு பிறகு ஏற்படும் கருத்து வேறுபாடு ஆகியவற்றை குறிப்பிடும் கதையை மிக அழகாக யுவராஜ் தயாளன் இயக்கி உள்ளார்.
விக்ரம் பிரபு, சாரதா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்ணதி, சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவில், மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து உள்ளது.
இந்த படத்தின் டிரைலர் சுவாரசியமாக இருக்கும் நிலையில் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments