சீயான் விக்ரமின் 'இருமுகன்' டிரைலர் தேதி?

  • IndiaGlitz, [Tuesday,June 14 2016]

விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பட வெளியீடு குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

விக்ரம் - நயன்தாரா முதல்முறையாக இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டிரைலர் தயாராகும் பணி தொடங்கிவிட்டதாகவும் ஜூலை முதல் வாரத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை சுதந்திர தின விடுமுறை வாரமான ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பிராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.