பிக்பாஸ் ஷாரிக் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

  • IndiaGlitz, [Saturday,December 08 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ், ஹரிஷ் கல்யாண், உள்பட ஒருசிலர் கோலிவுட் திரையுலகில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாரிக், 'உக்ரம்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்ற செய்தியை நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் ஷாரிக் நடிக்கவுள்ள இன்னொரு படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டைட்டில் '#143'. மூன்று பெண்களுடன் ஷாரிக் ஒரே கோப்பையில் குளிர்பானம் அருந்துவது போல் அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கும் இந்த படத்தின் டைட்டிலும் இதுவொரு ரொமான்ஸ் படம் என்பதை கூறுகிறது.

பிரசாந்த் கரண் என்பவர் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.