தோல் நிறத்தை வைத்து சீண்டுவது மட்டுமல்ல இனவாதம்... காட்டத்துடன் கருத்து தெரிவித்த இர்ஃபான் பதான்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இனவாதம் என்பது நிறத்தின் அடிப்படையில் பார்க்கப்படுவது மட்டுமல்ல... அதற்கு மேலும் இருக்கிறது என்ற பொருளில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கருத்துக் கூறியுள்ளார். டிவிட்டர் பதிவில் இர்ஃபான் வெளியிட்டுள்ள இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
அமெரிக்காவில் இனவெறுப்பினால் உயிரிழந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு இன்றுவரையிலும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடுமையான போராட்ங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்தப் போராட்டங்களுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட், கால்பந்து போன்ற சர்வதேச போட்டிகளிலும் இனவாதம் காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டை விளையாட்டு வீரர்களும் வெளிப்படுத்தி வருகின்றனர். பல உலகத் தலைவர்களும் தற்போது இனவெறுப்பு குறித்து காரசாரமான கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதான் இனவாதம் குறித்து ஒரு காட்டமான கருத்த வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது கருத்துச் சொந்த கருத்தாக இருக்குமோ என்கிற ரீதியிலும் விவாதம் கிளம்பியிருக்கிறது. “இனவாதம் என்பது தோலின் நிறத்தின் அடிப்படையிலானது மட்டுமல்ல. வேறு சமய நம்பிக்கையைச் சார்ந்தவர் என்பதாலேயே ஒரு சமூகத்தில் வீடு வாங்குவதற்கு உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் இனவாதத்தின் ஒரு வடிவம்தான்” எனப் பதிவிட்டு உள்ளார்.
இதுகுறித்து, மற்றொரு பதிவில் உங்களது சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியதற்கு அவர், “இது நான் கவனித்த விஷயம். யாராலும் இதை மறுக்க முடியாது என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இனவெறுப்பு காட்டப்படுகிறது என்ற வாதம் தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்வைக்கப் பட்டு வருகிறது. ஆனால் மற்ற சமயத்தவர் வீடு வாங்குவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுவதும் இனவாதம் தான் என்னும் இர்ஃபான் பதானின் கருத்து இந்தியக் கலாச்சாரத்தில் காட்டப்படும் இன்னொரு வகையான வெறுப்பு என்பதையும் விளக்கிக் காட்டுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout