இன்று இரும்புப்பெண்மணி இரோம் ஷர்மிளா திருமணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் இரும்புப்பெண்மணியும், சமூக போராளியுமான இரோம் சர்மிளா இன்று தனது காதலர் தேஸ்மந்த் கொட்டின்கோ அவர்களை கொடைக்கானலில் திருமணம் செய்துகொள்கிறார். இந்த திருமணத்திற்காக ஏற்கனவே கடந்த ஜூலை 12-ம் தேதி கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் அவர் மனு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவர் மனு செய்திருந்த அடுத்த நாளே கொடைக்கானல் பேத்துப்பாறையைச் சேர்ந்த தே.மு.தி.க பிரமுகரான மகேந்திரன் என்பவர் இந்த திருமணத்திற்கு ஆட்சேபம் தெரிவித்தார். இரோம் திருமணம் கொடைக்கானலில் நடந்தால் இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் புகார் கூறினார்.
இருப்பினும் எதிர்ப்புகளை மீறி இரோம்-தேஸ்மந்த் திருமணம் இன்று கொடைக்கானலில் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் சமீபத்தில் தலைப்பு செய்திகளில் அடிபட்ட 'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குனர் திவ்யா கலந்து கொள்கிறார்.
தனது திருமணம் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த இரோம் ஷர்மிளா, 'தமிழகம் அமைதி நிலவும் மாநிலம் என்பதால் தான் இங்கு வந்தேன். ஆனால் இங்கும் சிலரால் சிறு பிரச்னைகள் ஏற்படுகிறது. அதை களைய வேண்டும். எனக்கு பொதுமக்களும், ஆதிவாசி மக்களும் தொடர் ஆதரவு அளித்து வருகின்றனர்' என்று கூறினார்.
இரோம் சர்மிளா திருமணம் இன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக நடைபெறும் என்று அவருடைய வழக்கரிஞரும் சட்ட ஆலோசகர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com