பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தலைப்பு அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் ரஞ்சித் தயாரித்த 'பரியேறும் பெருமாள்' மிகப்பெரிய வரவேற்பையும் வசூல் அளவில் நல்ல வெற்றியையும் பெற்ற நிலையில் அவர் தயாரிக்கவிருக்கும் இரண்டாவது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை வெளியாகவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்றுமுன் இயக்குனர் ரஞ்சித் தனது அடுத்த தயாரிப்பு படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை தனது சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்துள்ளார். இதன்படி இந்த படத்தின் டைட்டில் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' ஆகும். இந்த படத்தை அதியன் ஆதிரை என்பவர் இயக்கவுள்ளார்.
ரஞ்சித் இயக்கிய 'அட்டக்கத்தி' படத்தின் நாயகன் தினேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, டென்மா இசையமைக்கிறார். செல்வா படத்தொகுப்பில் தா.ராமலிங்கம் கலை இயக்கத்தில் சாம் சண்டைப்பயிற்சியில் இந்த படம் உருவாகவுள்ளது.
Elated to announce my 2nd production venture #Irandamulagaporinkadaisi_GUNDU @Dineshvcravi playing the lead.Dir by @AthiraiAthiyan.DOP @kishorkumardop Music: @tenmamakesmusic Edit: @EditorSelva Art: @RamalingamTha Sound: @anthoruban Stunt: @_STUNNER_SAM @officialneelam Magizhchi! pic.twitter.com/4pP5aIlG8t
— pa.ranjith (@beemji) December 8, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com