சொந்த கணவரையே ஆன்லைனில் ஏலம்விட்ட இளம்பெண்… சூடுபிடித்த போட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
விசித்திரத்திற்கு பஞ்சமில்லாதது என்றால் அது உண்மையில் சமூகவலைத் தளங்கள்தான். அந்த வகையில் நியூசிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவரை ஆன்லைனில் விற்பனை செய்வதற்காக ஏலத்தில் விட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அயர்லாந்தைச் சேர்ந்தவர் லிண்டா மெக் அலிஸ்டர். இவர் ஜான் என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்போது நியூசிலாந்தில் வசித்துவருகிறார். இந்த ஜோடிக்கு 4 வயதில் கோல்ட் 6 வயதில் ரைடர் என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவர் ஜான் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மீன் பிடிக்கச்சென்றுள்ளார். இந்த நேரத்தில் வீட்டில் இருந்த லிண்டா தன்னுடைய கணவரை ஆன்லைனில் விற்பனை செய்வதற்காக விளம்பரத்துடன் ஏல அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
அதோடு அந்த விளம்பரத்தில் லிண்டா தனது கணவர் 6 அடி 1 அங்குலம் கொண்டவர். 37 வயதுடைய அவர் மீன்டிப்பதில் ஆர்வம் கொண்டவர். மேலும் இறைச்சிகளை விரும்பி தேர்ந்தெடுத்து விற்பனை செய்துவருகிறார். அவருக்கு உணவு மற்றும் தண்ணீரை கொடுத்தால் மிகவும் விசுவாசமாக இருப்பார் என்ற குறிப்புகளோடு ebay இணையத்தளம் வழியாக ஏலத்தில் விட்டிருக்கிறார். மேலும் ரிட்டர்ன் மற்றும் எக்சேஞ்ச் கிடையாது எனவும் லிண்டா கூறியுள்ளார்.
இந்த விளம்பரத்தை உண்மையென நம்பிய சில பெண்கள் குறைந்த நேரத்திலேயே ஜானை ஏலம் எடுப்பதற்காக முன்வந்துள்ளனர். கிட்டத்தட்ட 12 பெண்கள் ஜானை ஏலம் எடுக்க போட்டிப்போட்டதாகவும் 63 டாலர்கள், இந்திய மதிப்பில் 5 ஆயிரம் வரை ஏலம் போனதாகவும் கூறப்படுகிறது.
இப்படி வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்ட லிண்டா என்ன நினைத்தாரே தெரியவில்லை சிறிது நேரத்தில் தன்னுடைய விளம்பரத்தை அழித்திருக்கிறார். மேலும் தன்னை விற்பனை செய்ய முயற்சித்த லிண்டாவை பார்த்து ஜான் விழுந்துவிழுந்து சிரித்திருக்கிறார். கணவரை ஆன்லைனில் விற்பனை செய்ய முயன்ற இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வியப்பாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments