170 வருட நன்றியை திருப்பி செலுத்தும் அயர்லாந்து மக்கள்!!! மனதைப் பிழியும் வரலாற்றுச் சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகில் வல்லரசு நாடாக விளங்கிவரும் அமெரிக்கா கொரோனா வைரஸால் கடுமையான அழிவுகளைச் சந்தித்து வருகிறது. நிலைமையை சமாளிக்க அமெரிக்க அரசு ஹெலிகாட்பர் மணியை வாரி இறைத்து இருக்கிறது. ஆனாலும் எந்த ஆதாரமும் இல்லாத அமெரிக்க பூர்வக் குடிகளான சாவ்டவ் பழங்குடி மக்கள் கொரோனா வைரஸால் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். தற்போது இந்தப் பூர்வக்குடிகளுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்கள் அயர்லாந்து நாட்டு ஐரிஷ் பூர்வக்குடிகள்.
உலகில் எவ்வளவோ நாடுகளில் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடிவரும் நிலையில் அதென்ன அமெரிக்காவில் குறிப்பிட்ட பூர்வக் குடிகளுக்கு மட்டும் இந்த உதவி என்ற கேள்வி எழலாம். இங்குதான் சுவாரசியமே அடங்கியிருக்கிறது. தென்கிழக்கு அமெரிக்கப் பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட பல்லாயிரக் கணக்கான பூர்வக்குடிகள் பசி, பட்டிணியால் பாதிக்கப்பட்டு, சுமார் 4 ஆயிரம் உயிர்களையும் இழந்து தவித்தனர். பாதிக்கப்பட்ட இந்தப் பூர்வக்குடிகளை “இந்திய மண்டலம்” என்ற பெயரால் அழைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த பழங்குடியின மக்களும் 16 ஆண்டுகள் கழித்து ஒக்லஹாமா பகுதியில் வந்து நிரந்தமாகக் குடியேறினர். அவர்களுள் மூத்த பூர்வக்குடிகள்தான் சாவ்டவ் எனப்படும் இனத்தவர். சுமார் 173 ஆண்டுகளுக்கு முன்பு அயர்லாந்திலுள்ள ஐரிஷ் பூர்வக் குடிகள் கடுமையான வறுமையில் வாடியபோது இந்த சாவ்டவ் இன மக்கள், பெரும் நன்கொடையை அனுப்பி இருக்கிறார்கள்.
1847 இல் அயர்லாந்து பூர்வக்குடிகளின் பிரதான உணவான உருளைக் கிழங்குகளை லேட் பிலைட் என்ற பூஞ்சை நோற்த்தொற்று தாக்கியது. இதனால் கடுமையான வறுமைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டனர். பல காலமாக இந்நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அண்டை நாடுகளுக்கு புலம் பெயர வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. இச்செய்தியை கேள்விப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சாவ்டவ் பூர்வக்குடிகள் நியூயார்க் பணம் திரட்டும் குழுக்கள் மூலமாக சுமார் 170 அமெரிக்க டாலர்களை திரட்டி அனுப்பி வைத்தனர். சாவ்டவ் இன மக்களின் இந்த உதவித்தொகை, இன்றைய அமெரிக்க டாலரில் 5 ஆயிரம் டாலர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு பூர்வக்குடி இனத்தவர்கள் இவ்வளவு தொகையை வேறொரு நாட்டுக்கு அனுப்புவது பற்றிய அன்றைக்கு பல செய்தித்தாள்கள் ஆச்சயர்த்துடன் செய்தி வெளியிட்டன. “சோக்தாவின் நன்கொடை”, “ஏழை இந்தியன் இன்னொரு பழங்குடிக்கு பணம் அனுப்புகிறான்” இப்படி பல தலைப்புகளில் செய்தி வெளியானது.
அயர்லாந்தின் ஐரிஷ் பழங்குடிகளை பொறுத்த வரையில் அன்றைக்கு பெறப்பட்ட இந்த உதவித்தொகை பெரிய உதவியாக கருத்தப்பட்டது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை அவர்களது நான்காம் தலைமுறை குழந்தைகள் வரை மறக்காமல் இருக்கிறார்கள் என்பதுதான் இங்கு முக்கியம். ஒரு ஐரிஸ் கலைஞர் கடந்த 2017 இல் அமெரிக்க வாழ் பழங்குடிகள் செய்த உதவியை நினைவுக்கூறும் விதமாக ‘ஒரு கிண்ணத்தில் சாப்பாடு கொடுப்பது போல வர்ணித்து எஃகு இறகால் செய்யப்பட்ட தூரிகைகளை’ கொன்ட நினைவுச்சின்னத்தை உருவாக்கி இருந்தார்.
வரலாற்றில் மறக்க முடியாத உதவியாகக் கருதப்பட்ட அந்த 170 அமெரிக்க டாலர் உதவியை இன்றைக்கு ஐரிஷ் பழங்குடிகளால் திருப்பி கொடுக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி ஒருபோதும் அரசு கண்டுகொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கொரோனா சமயத்தில் இது மேலும் அதிகமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உட்டா, ஹரிசோனா, நியூ மெக்சிகோ பகுதிகளில் வாழும் பல்லாயிரக் கணக்கான பழங்குடிகள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதிகளில் வாழும் ஹோப்பி மற்றும் நவாஜோ பழங்குடிகளுக்குத்தான் தற்போது ஐரிஷ் பழங்குடிகள் தங்களது நன்கொடையை வழங்க முன்வந்திருக்கிறார்கள்.
இதுவரை 3200 நவாஜோ பழங்குடிகள் கொரேனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் 102 உயிரிழப்பும் நிகழ்ந்து இருக்கிறது. ஹோப்பி இனப் பழங்குடிகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது ஐரிஷ் பூர்வக்குடிகளைச் சார்ந்த குழுக்களின் மூலம் இதுவரை அமெரிக்காவிற்கு 820000 டாலர்கள் அனுப்பப் பட்டுள்ளது. இதில் தொகையில் 3.6 மில்லியன் டாலர்கள் நவாஜோ மற்றும் ஹோப்பி இன மக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
வியப்பூட்டும் வரலாற்றுச் சம்பவத்தில் இன்னொரு ஆச்சரியமும் இருக்கிறது. 173 ஆண்டுகளுக்கு முன்னர் பட்ட நன்றிக்கடனை திருப்பி செலுத்த 24 ஆயிரம் ஐரிஷ் பழங்குடிகள் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். ஒரு காலத்தில் பட்ட நன்றியை திருப்பி செலுத்த 4 தலைமுறைகளுக்கு பின்னர் அவர்களின் பேரன் பேத்திகள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். நன்றி மறக்காத ஐரிஷ் மக்களின் நன்றிக்கடன் ஒரு வரலாற்று நெகிழ்வை கொண்டதாக மாறியிருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com