3 மாதங்கள் கழித்து மனைவியின் பிரசவ வலி வீடியோவை வெளியிட்ட இர்பான்.. குவியும் கமெண்ட்ஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல யூட்யூபர் இர்பான் மனைவிக்கு, கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்த நிலையில், 3 மாதம் கழித்து, தனது மனைவி பிரசவ வலியுடன் இருப்பது, குழந்தை பிறப்பது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிரபல யூட்யூபரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான "புக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் இர்பான் என்பதும், இவர் சமூக வலைதளத்தில் பிரபலம் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும் போது, துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்தார். இர்ஃபான், தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தார். இது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய இருந்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி, இர்பான் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. நேற்று, அவர் தனது மனைவி பிரசவ வலியால் துடிக்கும் காட்சி, குழந்தை பிறந்தவுடன் அதை கையில் ஏந்தி இருக்கும் காட்சிகளை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ உணர்ச்சிகரமாக இருந்ததை அடுத்து இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com