நான்கு வரி வசனத்தை ஒரு நிமிடத்தில் மனப்பாடம் செய்ய வேண்டுமா? விக்ரம் பட நடிகர் வெளியிட்ட காமெடி வீடியோ 

  • IndiaGlitz, [Tuesday,September 15 2020]

விக்ரம் நடித்துவரும் ’கோப்ரா’ திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் நான்கு வரி வசனத்தை ஒரே நிமிடத்தில் மனப்பாடம் செய்ய இயக்குனர் அஜய் ஞானமுத்து வற்புறுத்தினார் என காமெடியாக வெளியிட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

விக்ரம் நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ’கோப்ரா’. இந்த படத்தை அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார் என்பதும் இன்று அஜய்ஞானமுத்து தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ’கோப்ரா’ படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் இந்த படத்தில் துருக்கி இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் பட இயக்குனரான அஜய் ஞானமுத்துவுக்கு தனது பிறந்தநாளை தெரிவித்துக்கொள்வதாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

மேலும் ’கோப்ரா’ படப்பிடிப்பின் போது எடுத்த ஒரு வீடியோவையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் அஜய்ஞானமுத்து என்னிடம் நான்கு வரிகள் கொண்ட வசனத்தை கொடுத்துவிட்டு ஒரே நிமிடத்தில் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று கூறியதாக அவர் கூற, அஜய்ஞானமுத்து உள்பட படக்குழுவினர் அனைவரும் சிரிக்கும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

ஆப்பிள் வாட்சுக்கு பதில் கற்கள்: பிரபல இசையமைப்பாளருக்கு ஆன்லைன் நிறுவனம் அளித்த பதில்!

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஒருவர் தனது சகோதரருக்கு பரிசளிக்க ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்த நிலையில் அந்த பார்சலில் வெறும் கற்கள் மட்டுமே இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் 

விஜய்சேதுபதியின் க/பெ ரணசிங்கம்: ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.

தமிழகத்தில் முதல் முறையாக திருநங்கைகள் நடத்தும் உணவகம்… மக்கள் மத்தியில் வரவேற்பு!!!

கோவை ஆர்எஸ் புரத்தில் திருநங்கைகள் ஒன்று சேர்ந்து உணவகம் ஒன்றை ஆரம்பித்து இருக்கின்றனர்.

வெள்ளி கிரகத்தில் உயிரினமா… பரபரப்பை ஏற்படுத்தும் புதுத்தகவல்!!!

வெள்ளி கிரகத்தில் உயிரினம் வாழ்வதற்குத் தேவையான பாஸ்பீன் வாயு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

அசத்தும் கண்டுபிடிப்பு… 10 அடி தூரத்தில் இருந்தே மற்றவர்களது உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் ஹெல்மெட்!!!

துபாய் நகரத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தூரத்தில் இருந்து கொண்டே பொதுமக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் நவீன ஹெல்மெட் கருவியை அறிமுகப்படுத்தி உள்ளனர்