இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்… விளாசும் முன்னாள் வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டி20 உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை இந்தியா நழுவவிட்டு இருக்கிறது. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் காணப்படுகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியைக் குறித்து பேசிய முன்னாள் வீரர் இர்பான் பதான் “இந்திய அணித் தேர்வில் இப்படி நடப்பது ஆச்சர்யமாக இருக்கிறது“ என்று சாடியுள்ளார்.
டி20 உலகக்கோப்பைக்கான முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுமோசமாக தோற்றுப்போனது. இதையடுத்து நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து அணியின் முதல் வீரரர்களாக களம் இறங்கவேண்டிய ரோஹித் சர்மா மற்றும் ராகுலுக்கு பதிராக ராகுல் இஷான் கிஷன் ஜோடி களம் இறங்கினர்.
இதற்கு காரணம் நியூசிலாந்து வீரர் டிரெண்ட் பவுல்ட் சுவிங் பந்துவீசுவார் எனக் கூறப்பட்டது. இதனால் முதல் ஆளாக களம் இறங்கவேண்டிய ரோஹித் ஒரு இடம் மாறி 3 ஆவதாக களம் இறங்கினார். இந்நிலையில் நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத இந்திய அணி வீரர்கள் சரசரவென சரிந்து 20 ஓவர் முடிவில் 110 ரன்களை மட்டுமே எடுத்தனர்.
இதனால் அடுத்து ஆடிய நியூசிலாந்து வீரர்கள் எந்த சிரமமும் இல்லாமல் இலக்கை எட்டமுடிந்தது. அதோடு நியூசிலாந்து வீரர்களுக்கு பந்துவீசிய இந்திய பவுலர்கள் ஏனோ தானோ வென்று பந்துவீசினர் என்றும், டஃப் கொடுக்க வேண்டிய இடத்தில் மந்தமாக இருந்தனர் என்றும் ரசிகர்கள் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்
இதையடுத்து, “எந்தவொரு பெரிய போட்டியிலும் அணியின் பிளெயிங் லெவனை வீரர்களின் இடத்தை ஒரே ஒரு ஆட்டத்தில் மாற்றி விரும்பிய முடிவுகளைப் பெற முடியாது. வீரர்களுக்கு ஸ்திரத்தன்மை தேவை. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இப்படி ஒரு மாற்றம் செய்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது“ என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com