ஒரே ஷாட்டில் உருவான 'இரவின் நிழல்': சூப்பர் அப்டேட் தந்த பார்த்திபன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பார்த்திபன் என்ற ஒரே ஒரு கேரக்டர் மட்டுமே நடித்த ’ஒத்த செருப்பு’ என்ற திரைப்படம் கடந்த 2019 ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஒரே ஷாட்டில் பார்த்திபன் இயக்கி வரும் திரைப்படம் ’இரவின் நிழல்’.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது என்பதும் இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது மே 1ஆம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீடு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசை அமைத்த ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட வித்தியாசமான இந்த படத்தின் பாடல்கள் எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Special person in my life is expressing that ‘Iravin Nizhal’ is a special Padam.
— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 9, 2022
இரவின் நிழல்
இறைவனின் நிழலாய்
இசையின் பிரவாகமாய்
இருக்கும் நம் ARR-ஐ
கொண்டாடவிருக்கிறோம்.
மே-முதலிரவு!!
|#IravinNizhal#Shadowofthenight #Parthiban #RadhakrishnanParthiban #Arr #ARRahman pic.twitter.com/ieyYxFyVbE
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments