'இரவின் நிழல்' சர்ச்சை: மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தில் நடித்த நடிகை ஒருவர் அளித்த பேட்டியால் பெரும் சர்ச்சையானது. இதனை அடுத்து அந்த நடிகை மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் மன்னிப்பு கேட்டுள்ளனர்
‘இரவின் நிழல்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இந்த படத்தில் நடித்த நடிகை பிரிகிடா, ‘சேரிக்கு சென்றால் அங்கு கெட்ட வார்த்தை மட்டும் தான் கேட்க முடியும் என்றும் சினிமாவுக்காக யாரும் ஏமாற்ற முடியாது’ என்றும் கூறியிருந்தார். அவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
இதனை அடுத்து நடிகை பிரிகிடா தனது சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வார்த்தைகளை சொன்னதற்காக மனம் வருந்துகிறேன் என்றும் ’இரவின் நிழல் படத்தில் இடம் மாறும்போது மொழி மாறுகிறது என்பதை தெரிவிக்க முயற்சித்தேன் என்றும் ஆனால் தவறான உதாரணத்தை எடுத்துக் கொண்டதற்காக மிகவும் மோசமாக உணர்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் பிரிகிடாவை தொடர்ந்து அவரது சார்பாக பார்த்திபனும் மன்னிப்பு கேட்டு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம். 1989ல் நடக்கும் கதை இது. 2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம் கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால். பெரும்பாலும் என் படங்கள் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே'' என்று தெரிவித்து இருக்கிறார்.
Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே! https://t.co/NSq3LNaYt7
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 17, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com