என்னால ஏத்துக்கிடவே முடியல.. 50 ரூபாய் செலவுல வேலையில முடிச்சிறாங்க..! ' 'இரவின் நிழல்' நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெறும் ஐம்பது ரூபாய் சோப்பு போட்டு குளித்து புத்துணர்ச்சி ஆகிவிடுகிறார்கள், ஆனால் நாங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் எங்களால் அந்த மாதிரி ஆக முடியவில்லை என்றும் புலம்பியபடி நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பார்த்திபன் நடித்த இயக்கிய ’இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகை சாய் பிரியங்கா ரூத். இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் 20 ரூபாய் 50 ரூபாய் வரை சோப்பு வாங்கி என் சொந்தக்காரர்கள், வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் குளிக்கின்றனர். விலை உயர்ந்த சோப்பு கூட அவர்கள் வாங்குவதில்லை. ஆனாலும் அவர்கள் குளித்தவுடன் ரொம்பவே புத்துணர்ச்சியாக இருக்கிறார்கள்.
ஆனால் நான் சன் ஸ்க்ரீன், மாய்ஸ்சரைசர், டே கேர், நைட் கேர், என்ன வேணா எடுத்துக்கலாம்.. விட்டமின் சி, விட்டமின் கே எடுத்துக்கிறேன், ஆனாலும் அவங்கள மாதிரி என்னால் பிரஷ்ஷா வர முடியவில்லை. 50 ரூபாய் சோப்பு போட்டு குளிச்சிட்டு எப்படி இவ்வளவு பிரஷ்ஷா இருக்காங்க என்று தெரியவில்லை, இதை என்னால ஏத்துக்கிடவே முடியலை, நாம இவ்வளவு செலவு செஞ்சும் நம்ம ஃபேஸ்’ என கூறி தனது ரியாக்சனை தெரிவித்துள்ளார்.
நடிகை சாய் ப்ரியங்காவின் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments