எச்சரிக்கை..! டெல்லி கலவரத்திற்கு எதிராக இரான் தலைவர் கண்டணம்.வைரல் டிவீட்.

  • IndiaGlitz, [Friday,March 06 2020]

இந்துத்துவவாதிகள் மற்றும் அவர்களின் கட்சிகளை எதிர்கொண்டு முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலைகளை நிறுத்துங்கள் என இந்திய அரசிற்கு ஈரானின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு டெல்லியில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். ஜாஃப்ராபாத்தில் தொடங்கிய இந்த கலவரத்தில் 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் வீடுகள் கடைகள் என சூறையாடப்பட்டன.

உலகில் பல நாடுகளில் உள்ள தலைவர்கள் இந்த கலவரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று ஈரானின் அதி உயர் தலைவர் தந்து கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே டெல்லியில் நடந்த கலவரம் குறித்து லண்டன் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. வன்முறை கலவரம் போன்றவை நடக்கும் போது உலக நாடுகளின் மத்தியில் நாட்டை பற்றிய நல்ல எண்ணமானது மாறிவிடும். இது பற்றி இலண்டன் பாராளுமன்றத்தில் பேசிய உறுப்பினர் ஒருவர் இந்திய நாட்டில் ஆர்.எஸ் எஸ் அமைப்பானது ஜெர்மனியின் நாஸி அமைப்போடு தொடர்புடையது. எனவே உலக நாடுகள் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறியிருந்தார்.

இரான் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி தனது டிவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் படுகொலைகளின் வீடியோக்களை பார்க்கும் பொது மன வேதனைப்படுகிறது. முஸ்லீம் உலகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படாமல் இருக்க இந்திய அரசானது இந்துத்துவ ஆதரவாளர்கள் மற்றும் அது சார்ந்த கட்சியினருக்கு எதிராக முடிவெடுத்து இது போன்ற இஸ்லாமியர் படுகொலைகள் திரும்பவும் நடக்காமல் தடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த டிவீட்டனது 10 ஆயிரத்துக்கும் அதிகமாக ரீ-டிவீட் செய்யப்பட்டு பலரால் பகிரப்பட்டு வருகிறது.

More News

ஜனநாயகத்தை காதலித்த பர்மாவின் பெண் போராளி ஆங் சாங் சூகி; முரணுக்குள் மாட்டிக் கொண்ட வரலாறு

உலகில் ஒரு தலைவர் புகழப்பட்ட அளவிற்கு வெறுப்பிற்கும் ஆளாகி இருக்கிறார் என்றால் அது கண்டிப்பாக சூகி ஒருவராகத்தான் இருக்க வேண்டும்.

கூட்டமாக கூடுவதைத் தவிருங்கள்..! இந்திய மத்திய சுகாதாரத்துறை அறிக்கை.

மக்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது. N95 முகமூடிகள், சானிடைசர்கள் போன்றவை விலை உயர்த்தி விற்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படுகிறது.

சாவுங்கடா..! மற்றவர்களுக்கும் நோய் பரப்பும் நல்லெண்ண சீனர்கள். அதிர்ச்சி வீடியோ.

இது போன்ற செயல்கள் பிறருக்கு நோய் பரப்பும் என்பது மட்டுமல்லாமல் உயிருக்கே உலை வைத்துவிடும். ஏனென்றால் நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோமோ அதே தானே நமக்கும் நடக்கும்.

'இரும்புத்திரை' படத்தின் இரண்டாம் பாகமா சக்ரா? விஷால் பேட்டி

விஷால் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகினாரா சமந்தா? பரபரப்பு தகவல் 

விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கள்ள 'காத்து வாக்கில ரெண்டு காதல்' என்ற படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது