எச்சரிக்கை..! டெல்லி கலவரத்திற்கு எதிராக இரான் தலைவர் கண்டணம்.வைரல் டிவீட்.
- IndiaGlitz, [Friday,March 06 2020]
இந்துத்துவவாதிகள் மற்றும் அவர்களின் கட்சிகளை எதிர்கொண்டு முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலைகளை நிறுத்துங்கள் என இந்திய அரசிற்கு ஈரானின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். ஜாஃப்ராபாத்தில் தொடங்கிய இந்த கலவரத்தில் 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் வீடுகள் கடைகள் என சூறையாடப்பட்டன.
உலகில் பல நாடுகளில் உள்ள தலைவர்கள் இந்த கலவரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று ஈரானின் அதி உயர் தலைவர் தந்து கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே டெல்லியில் நடந்த கலவரம் குறித்து லண்டன் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. வன்முறை கலவரம் போன்றவை நடக்கும் போது உலக நாடுகளின் மத்தியில் நாட்டை பற்றிய நல்ல எண்ணமானது மாறிவிடும். இது பற்றி இலண்டன் பாராளுமன்றத்தில் பேசிய உறுப்பினர் ஒருவர் இந்திய நாட்டில் ஆர்.எஸ் எஸ் அமைப்பானது ஜெர்மனியின் நாஸி அமைப்போடு தொடர்புடையது. எனவே உலக நாடுகள் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறியிருந்தார்.
இரான் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி தனது டிவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் படுகொலைகளின் வீடியோக்களை பார்க்கும் பொது மன வேதனைப்படுகிறது. முஸ்லீம் உலகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படாமல் இருக்க இந்திய அரசானது இந்துத்துவ ஆதரவாளர்கள் மற்றும் அது சார்ந்த கட்சியினருக்கு எதிராக முடிவெடுத்து இது போன்ற இஸ்லாமியர் படுகொலைகள் திரும்பவும் நடக்காமல் தடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த டிவீட்டனது 10 ஆயிரத்துக்கும் அதிகமாக ரீ-டிவீட் செய்யப்பட்டு பலரால் பகிரப்பட்டு வருகிறது.
The hearts of Muslims all over the world are grieving over the massacre of Muslims in India. The govt of India should confront extremist Hindus & their parties & stop the massacre of Muslims in order to prevent India’s isolation from the world of Islam.#IndianMuslimslnDanger
— Khamenei.ir (@khamenei_ir) March 5, 2020