அமெரிக்கா இராணுவமும் ட்ரம்பும் இனிமேல் தீவிரவாதிகள்.. ஈரான் அறிவிப்பு.
- IndiaGlitz, [Tuesday,January 07 2020]
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க ராணுவம், படை தளபதிகள், ட்ரம்ப் அனைவரும் தீவிரவாதிகளாக கருதப்படுவார்கள் என ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி, “ தளபதி சுலைமான் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டதற்கான பழியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார். எனவே நாங்கள் அமெரிக்காவுக்கு எதிராக முன்னர் கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் மாற்றம் கொண்டுவர இருக்கிறோம். தளபதி சுலைமான் மரணத்துக்கு காரணமான அமெரிக்க ராணுவம், அமெரிக்க படை தளபதிகள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என அனைவரும் தீவிரவாதிகளாக கருதப்படுவார்கள் ”என்று தெரிவித்தார்.