ஈரான் - ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்: 67 பேர் பலி

  • IndiaGlitz, [Monday,November 13 2017]

ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 67 பேர் பலியாகியுள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2ஆக இருந்ததாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் அதிபர் ஹாசன் ரெளஹானி உடனடியாக மீட்புப்பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய உத்தரவிட்டுள்ளார். நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி அச்சத்துடன் நேற்று இரவு முழுவதும் வீதிகளில் நின்றதாக ஈரானிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஈராக் நாட்டிலும் சாடர் நகரத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்று கடுமையாக சேதமடைந்திருப்பதாகவும் பழைய வீடுகள் பல இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த 2003ஆம் ஆண்டு ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 26000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசனுக்கு என்னுடைய சப்போர்ட் எப்போதும் உண்டு: பிக்பாஸ் பிரபலம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான பரணி, மற்ற பங்கேற்பாளர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் இடையிலேயே வெளியேறிவிட்டாலும் அவருக்கு மக்கள் ஆதரவு இருந்தது

வேலைக்காரன்' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்:

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது.

மீண்டும் வருவேன். நம்புங்கள்: சிம்பு வெளியிட்ட பரபரப்பு வீடியோ

சிம்பு பாடிய பணமதிப்பிழப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து

சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: கலெக்டர்கள் உத்தரவு

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

25 வருட சினிமா பயணம்: விஜய்யை சிறப்பிக்கும் 'தளபதி யுகம்' பாடல்

தளபதி விஜய் திரையுலகில் அறிமுகமாகி 25 வருடங்கள் பூர்த்தி ஆனதை அடுத்து அவரது திரையுலக பயணத்தை சிறப்பிக்கும் வகையில் நேற்று ஒரு பாடல் வெளியாகியுள்ளது.