ஹிஜாப் அணியாமல் வீடியோ… பிரபல நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்!

  • IndiaGlitz, [Monday,November 21 2022]

ஹிஜாப் அணியாமல் பொதுவெளியில் நின்றுகொண்டு வீடியோ வெளியிட்ட ஈரானிய நடிகையை அந்நாட்டு அரசு கைது செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹிஜாப்பை சரியாக அணியவில்லை எனக்கூறி கடந்த செப்டம்பர் மாதம் குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த மஹ்சா அமினி எனும் 22 வயது இளம்பெண் ஈரானில் உள்ள தெஹ்ரான் அறநெறி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் போலீஸ் காவலில் இருக்கும்போதே உயிரிழந்தார். இந்த உயிரிழப்புக்கு மாரடைப்பு காரணமாகக் கூறப்பட்டாலும் அமினியின் பெற்றோர் காவல்துறை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து ஈரானில் கடந்த இரண்டு மாதங்களாக ஹிஜாப் கட்டாயத்துக்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களை ஈரானியக் குடியரசு அதிகாரிகள் கலவரங்கள் எனும் பெயரில் ஒடுக்குவதாகக் கூறப்படுகிறது. மேலும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் பிரபலங்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் தற்போது ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஹெங்கமே காசியானி எனும் 52 வயது நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். கடந்த சனிக்கிழமை வெளியான இந்த வீடியோவில் அவர் தலையில் ஹிஜாப் அணியாமல் சில நிமிடங்கள் காமிராவை பார்த்துவிட்டு பின்னர் தனது போனிடைல் போடப்பட்ட தலைமுடியை மட்டும் காட்டுகிறார். இந்த வீடியோவிற்கு முன்பே தனக்கு நிதித்துறையில் இருந்து சம்மன் வந்ததாக சமூகவலைத் தளத்தில் பதிவிட்ட அவர் வீடியோ வெளியிட்ட பிறகு “ஒருவேளை இது எனது கடைசி பதிவாகக் கூட இருக்கலாம். இந்த நிமிடத்திலிருந்து எனக்கு என்ன நடந்தாலும் சரி, எப்போதும் போல எனது கடைசி மூச்சு வரை நான் ஈரானிய மக்களுடன் இருப்பேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுகளுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை ஹெங்கமே காசியானி அறநெறி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காசியானி ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முறையில் வீடியோ வெளியிட்டு தற்போது கைதாகி இருப்பது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் காசியானிக்கு முன்பே ஹிஜாப் அணியாத குற்றத்திற்காக விருதுகள்பெற்ற 70 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ரியாஹி எனும் நடிகையும் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹிஜாப்புக்கு எதிராக தற்போது ஈரானில் போராட்டங்கள் வலுபெற்றுவரும் நிலையில் அரசாங்க விதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பேராட்டக்காரர்களைக் கலகக்காரர்கள் எனக் குறிப்பிடும் அந்நாட்டு அரசு இதுதொடர்பாக பல பிரபலங்களைத் தொடர்ந்து கைது செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

வெற்றிமாறனின் முக்கிய திரைப்படம் டிராப்பா?

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாக இருந்த முக்கிய திரைப்படம் ஒன்று டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுவது திரை உலகில் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அஜித்தின் சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்!

அஜித் நடித்த சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். 

20 ஆண்டுகளுக்கு பின் ரிலீசாகும் ரஜினியின் படம்.. விரைவில் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ஒன்று கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சீசனின் முதல் ஓப்பன் நாமினேஷன்: யாருக்கு குறி?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில முறை ஓபன் நாமினேஷன் நடத்தப்படும் என்பதும் அப்போது நாமினேஷன் செய்பவர் நேரடியாகவே இரண்டு போட்டியாளர்களை அவர்கள் முன்னாடியே

கார், டிவி, பிரிட்ஜ் எதுவும் வாங்காதீங்க…. அமேசான் நிறுவனரே கூறிய புதிய அறிவுரை!

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பெசோஸ் கார், டிவி, பிரிட்ஜ், டிவி என எந்த அத்யாவசியப் பொருள்