இரட்டை அர்த்தத்தில் டைட்டில் வைத்த 'இருட்டு அறை' இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
’ஹர ஹர மகாதேவகி’ மற்றும் ’இருட்டு அறையின் முரட்டு குத்து’ ஆகிய இரண்டு அடல்ட் காமெடி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார். இந்த நிலையில் ’இருட்டு அறையின் முரட்டு குத்து’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே நடித்து இயக்கி வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் டைட்டிலை நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படத்தின் டைட்டில் ’இரண்டாம் குத்து’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலும் இரட்டை அர்த்தத்துடன் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் கூறி வருகின்றனர்.
சந்தோஷ் ஜெயகுமார், பிக்பாஸ் புகழ் டேனியல், மீனால் சாஹூ, ஷாலு ஷம்மு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார்.
Here is the first look of my brother @santhoshpj21 's #IrandamKuththu
— Gautham Karthik (@Gautham_Karthik) October 1, 2020
His first venture as an Director & Actor along side my other brother @Danielanniepope .
All the best guys!#IAMK2FirstLook @Rockfortent @harikoms @Meenal_Sahu27 @ShaluShamu @tsk_actor @dharankumar_c pic.twitter.com/kzMAWStbxp
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments