இதை பார்த்தெல்லாம் கண்ணு கூசலையா? பாரதிராஜாவுக்கு 'இரண்டாம் குத்து' இயக்குனர் கேள்வி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய ’இரண்டாம் குத்து’ என்ற திரைப்படம் குறித்து சற்று முன் கடுமையாக விமர்சனம் செய்த இயக்குனர் இமயம் பாரதிராஜா ’இந்த படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசுகிறது என்றும் சினிமா வியாபாரமாக இருந்தாலும் கேவலமான நிலைக்கு அந்த வியாபாரம் வந்திருப்பது வேதனை அளிப்பதாகவும் கல்வியை போதிக்கின்ற இடத்தில் காமத்தை போதிக்கவா வந்தோம் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
பாரதிராஜாவின் அறிக்கை சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜாவுக்கு இயக்குனர் சந்தோஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த 1981-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ’டிக்டிக்டிக் ‘ என்ற படத்தின் ஸ்டில்லை பதிவு செய்து, ’இந்த படத்தை பார்த்து கூசாத கண்ணு இப்போ மட்டும் கூசுகிறதா? என்று கேள்வியை எழுப்பியுள்ளார். அந்த ஸ்டில்லில் கமல்ஹாசனுடன் 3 நடிகைகள் பிகினி உடையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
With all due respect to him
— Santhosh P Jayakumar (@santhoshpj21) October 8, 2020
Tik Tik Tik movie in 1981
la idha paathu koosadha kannu, ippo koosirucho...? @Danielanniepope @Rockfortent @behindwoods @news7tamil https://t.co/ZcGzsKAAfs pic.twitter.com/I7zqtWGMqs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com